சத்தியமங்கலத்தில் 'பினோ' பேமென்ட் வங்கி துவக்கம்

    சத்தியமங்கலம் ஜீவா மக்கள் சேவை மையத்தின் சார்பில், ராஜீவ் நகரில் 'பினோ' பேமென்ட் வங்கி கிளை துவங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில்,  ஈரோடு-ஈதல் அறக் கட்டளையின்  ஒருங்கிணைப்பாளர் எஸ்.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.
ஈதல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், எம்.உதயகுமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
சத்தியமங்கலம் நகர்மன்றத் தலைவர்ஆர்.ஜானகிராமசாமி, லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.கே.பொண்ணுச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பி.எல்.சுந்தரம்,
பினோ பேமன்ட் வங்கியின் மண்டல தலைவர். டி.ராகவேந்திரா ஆகியோர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தனர். பல்வேறு டிஜிடல் வங்கி சேவைகளை இந்த பேமன்ட் வங்கியின் மூலம் மேற்கொள்ள இயலும்.

 

Previous Post Next Post