தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

  


தேனி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர்   மு.க.ஸ்டாலின் இன்று தேனி மாவட்டம் அன்னஞ்சி விலக்கில் அமைக்கப்பட்ட விழா மேடையில் உரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் தேனி மாவட்டத்தில் 112.21 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளையும், 74.21 கோடியில் மதிப்பில் 40 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டம் கலெக்டர் முரளீதரன்,தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி,  மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமச்சந்திரன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணகுமார், உப்பட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும், திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள்,  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post