சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஓமலூர் மெயின் ரோட்டில் ஜூவல்ஒன் பிரமாண்டமான புதிய ஷோரூம் திறப்பு விழா

  பெண்மனதைப் புரிந்த பொன் என்ற தாரக மந்திரத்துடன் திகழ்ந்து வரும் பெண்களின் மனம் கவர்ந்த தங்க நகை ஆபரண பிராண்டும், தமிழகத்தைச் சேர்ந்த எமரால்டு குழுமத்தின் ஒரு அங்கமுமாகிய ஜூவல்ஒன் ஏற்கனவே சேலத்தில் சிறிய இடத்தில் இயங்கி வந்த இந்த ஷோரூம் தற்போது பிரம்மாண்டமாக புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.  இந்தப் புதிய ஷோரூமை எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் கே.சீனிவாசன் , தலைமை செயல் அதிகாரி என்.வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாரம்பரிய முறையில் குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடைபெற்றது. 

தொடக்க விழா சலுகையாக ஜூவன்ஒன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கும்போது எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவுள்ளது. சலுகைகளின் ஒருபகுதியாக வாடிக்கையாளர்களுக்கு இலவச சில்வர் அக்ஷய விளக்கும் வழங்கப்பட இருக்கிறது. மக்களின் மனம் கவரும் வகையில் உகந்த விலை வைர நகைக் கலெக்ஷனான சியரா பூக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நகைக் கலெக்ஷனான அயனா, நீர்வீழ்ச்சியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வைர நகைக் கலெக்ஷனான நிர்ஜரா, துடிப்பான ஜெம் ஸ்டோன் நகைக் கலெக்ஷனான ஜீனா ஆகிய நான்கு வகையான கலெக்ஷன்களை கடந்த 12 மாதங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது என்றார். மிகக் குறைந்த அளவான 4.99 சதவீத வி.ஏ வில் தொடங்கி இந்த ஷோரூமில் நகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும் முதல் முறையாக திருமண நகைகளுக்கு எனப் பிரத்தியேக கவுண்டரும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. செல்வன் பிராண்டிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் 15 கிளைகள் உள்ளன. இந்த ப்ராண்ட் பிரான்சைஸ் மற்றும் பிசினஸ் பார்ட்னர்கள் மூலமாக மாநில மற்றும் தேசிய அளவில் புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

Attachments area
Previous Post Next Post