தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சேலம் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

   சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகே டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சேலம் மாவட்டம் சார்பில்  டிஎன்ஜிடிஇயூ மாநிலச் செயலாளர் கே.முருகேசன் தலைமையில் , மாநில செயலாளர் ஏ.முகமதுஅலி முன்னிலையில் , மாநில துணைத் தலைவர் பி.பெரியசாமி, மாவட்ட தலைவர் பி. கணேசன் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினர். 

மாவட்ட தலைவர் திருமுருகன், மாவட்ட செயல் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் முருகேசன், செல்வராஜ், மாவட்ட இணைச்செயலாளர் மாது, மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், லட்சுமணசாமி, சிவப்பிரகாசம் ஆகியோர் ஆர்ப்பாட்ட கருத்துரையாற்றினர்.  தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் வாக்குறுதியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை டாஸ்மாக் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரமும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும், டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டியும்,  டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குவதாக தமிழக அரசு தெரிவித்ததின் பேரில் அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட சங்கத்தின் மாநில தலைவர் தோழர் கு.சரவணன் அவர்களின் பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.  இறுதியாக மாவட்ட பொருளாளர் வி.ராஜா நன்றி உரையாற்றினார். 

Attachments area
    
Previous Post Next Post