சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம்

   சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள்,திரு மஞ்சள்,சந்தனம், இளநீர்,தேன்,பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வெள்ளி கவசத்தில் காட்சி அளித்தார் . உற்சவர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் திருக்கோவிலினுள்  உள் புறப்பாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சோடச உபசார பூஜை சிறப்பாக நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரதோஷ நாயகனை வேண்டி வழிபட்டனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்குமம் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Previous Post Next Post