குஜராத் : கண்டெய்னர்களில் மறைத்து ஷார்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த 11.70 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் - வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை.!

அகமதாபாத்தின் சபர்மதியில் உள்ள உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையத்தில் (ICD) இருந்து ஷார்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த 14.63 மெட்ரிக்டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.11.70 கோடியாகும். 

(Operation Rakth Chandan) ஆபரேஷன் செம்மரக்கட்டை என்ற பெயரிலான இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சரக்குப்பெட்டகத்தை ஸ்கேனிங் செய்த போது, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த கழிவறை சாதனங்களுக்கு பதிலாக, உருட்டுக்கட்டைகள் வடிவிலான பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. 


இதையடுத்து அந்த கண்டெய்னரை திறந்து பார்த்த போது, அதில் 840 செம்மரக்கட்டைகள் இருந்ததையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post