கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - பொதுமக்கள் கலக்கம்.

நடப்பு மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலையை, இன்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இதன்படி, நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,015 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 190 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரிக்கப்பட்டது. இதனால், கடந்த மாத (ஏப்ரல்)  விலையான ரூ.2,405.50ல் இருந்து ரூ.102.50 அதிகரித்து ரூ.2,508 ஆக நிர்ணயிக்கப்பட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நேரத்தில் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post