இலங்கை அரசு திவால் ஆனதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

 

இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.!

பணவீக்கம் 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கும் என அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்!

மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், மக்கள் போராட்டமும் அரசியல் நெருக்கடியும் இலங்கையை சீர்குலைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. இலங்கை தற்போது முதல் தடவையாக திவால் நிலையில் உள்ளது. நாட்டின் மொத்தக் கடனை மறுசீரமைக்கும் வரை இலங்கை அரசாங்கத்தால் கடனை செலுத்த முடியாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நேற்று  நடைபெற்ற அரசாங்கக் கூட்டத்தில் கொள்கை வகுப்பாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் நாங்கள் திவாலாகிவிட்டோம், எங்களிடம் டாலர்களோ ரூபாயோ இல்லை' என பிரதமர் ரனிலும் அறிவித்ததால் இலங்கையில் கடும் குழப்பம் நிலவுகிறது!

#srilanka | #bankruptcy

Ahamed

Senior Journalist

Previous Post Next Post