வெள்ளை மேலாதிக்க 'விஷத்தை' நிராகரியுங்கள் - அமெரிக்கர்களுக்கு ஜோ பிடென் அழைப்பு.!

வாஷிங்டன் - நியூயார்க்கின் பஃபேலோவில் கடந்த வார இறுதியில் இனவெறியுடன் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து 10 பேர் கொல்லப்பட்ட இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் அவரது மனைவி இருவரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வெள்ளை மேலாதிக்க மனோபாவத்தின் "விஷத்தை" நிராகரிக்குமாறு அனைத்து அமெரிக்கர்களுக்கும் அழைப்பு விடுத்தார். மேலும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை உள்நாட்டு பயங்கரவாதம் என்று கண்டனம் செய்தார், 

மேலும் அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் "எனது மனைவியும் நானும் உங்கள் பக்கம் நிற்க வந்தோம், உங்கள் குடும்பங்களுடன், நாங்கள் துக்கத்தை பகிர்ந்து கொள்ள வந்துள்ளோம்" என்று கூறினார். பின்னர் அவர் கடுமையான துப்பாக்கி சட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததுடன் இனவெறியை நிராகரிக்கவும், நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளவும் அமெரிக்கர்களை வலியுறுத்தினார்.




Ahamed

Senior Journalist

Previous Post Next Post