புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L.வெங்கட்டராமன் மே தின வாழ்த்து

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L.வெங்கட்டராமன் மே தின வாழ்த்து

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி ஏற்படுவதற்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மே தினம் என்று கொண்டாடப்பட க்கூடிய இந்த தொழிலாளர்கள் தினத்திற்கும் , புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் ஒரு சிறப்பான தொடர்பு உண்டு. எங்கள் கட்சி பின்பற்றுகின்ற தலைவர்களில் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வெற்றிக்கண்ட மாவீரன் மரியாதைக்குரிய திரு. சிங்காரவேலன் அவர்கள் வழி நடப்பதை பெருமையாக கருதுகிறோம். அவர்தான் , உலகில் ரஷ்யா , சீனா ஆகிய நாடுகளில் கொண்டாடி வந்த மே தினத்தை ஆசிய கன்டத்திலும் கொண்டாட வலியுறுத்தி போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டவர் திரு சிங்காரவேலர் அவர்கள். அதனால் தான் இன்று தொழிலாளர்கள் அனைவரும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெற்று மே ஒன்று தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் மே ஒன்று தொழிலாளர் தினத்தில் புதுவைக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. நமது புதுவையின் மக்கள் தலைவராக விளங்கிய திரு. வ . சுப்பையா அவர்கள் தொழிலாளர்கள் 14 மணி நேரம் வேலை பளுவுடன் கூடிய நேரத்தை 8 மணி நேரமாக மாற்ற கோரி குரல் கொடுத்து வெற்றி கண்டவர். இது புதுவைக்கு மேலும் ஒரு மைல் கல்லாக விளங்கிய பெருமை மக்கள் தலைவர் வ. சுப்பையா அவர்களையே சேரும். இந்த இரு பெரும் தலைவர்களால் தொழிலாளர்கள் பெற்ற பயன் சொல்லில் அடங்காது . அப்படிப்பட்ட இரு பெரும் தலைவர்களின் கொள்கை களையும், அவர்களின் படங்களையும் நாங்கள் பயன்படுத்தி வருவது , கொள்ளை காரர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற இன்னொரு சுதந்திர வேட்கையுடன், தொழிலாளர்களுக்காக புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் செயல் படுகிறது என்பதை மக்கள் விரைவில் புரிந்து தகுந்த பாடம் புகட்டுவார்கள். மேலும் ஊதியம் கொடுப்பவன் கடவுளும் இல்லை , ஊதியம் பெறுபவன் அடிமையும் இல்லை என்பதை மனதிற்கொண்டு , உடம்பினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகினை இயக்கி கொண்டிருக்கிற அனைத்து உன்னத தொழிலாளர்களுக்கு ம் மக்கள் முன்னேற்ற கழகத்தின்.சார்பாக இனிய தொழிலாளர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தனது மே தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார் 
Previous Post Next Post