ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கரையில் கடல்நீர் உள்வாங்கியதால் அச்சம்!

 ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் கடல் நீர் 50 அடிக்கு  உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு நாள்தோறும் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடிச் செல்வது வழக்கமாக உள்ளது

இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு மேலாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்ராயர் சத்திரம், அரிசல்முனை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றம் அடைந்தது அலைகள் ஆக்ரோஷத்துடன்  எழுந்து வருகிறது

இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் திடீரென கடல் நீர் 50 அடிக்கு உள்வாங்கியதால்  கடற்கரைக்கு புனித நீராட வந்த பக்தர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்

இதனால் கடலுக்கு உள்ளே இருந்த பவளப்பாறைகள்,  பழைய சுவாமி சிலைகள் அனைத்தும் வெளியே தெரிந்து வருகிறது.

Previous Post Next Post