உடன்குடியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக தப்பிய 38 பயணிகள்.!


தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம்  டோல்கேட் பகுதியில் உடன்குடியில் இருந்து  கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ பிடித்ததில் 38 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து நேற்று இரவு 8மணிக்கு  கோயம்புத்தூரூக்கு 38 பயணிகள் புறப்பட்டனர். தனியார் ஆம்னி பேருந்து தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது அப்போது 38 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். புதியம்புத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Previous Post Next Post