சுகன் சுகா மெடிக்கல் செண்டரின் சாய் கிருபா டிரஸ்ட் சார்பில் ஜூலை 3-ந்தேதி விவேகானந்தர் மாரத்தான்

 திருப்பூர், திருமுருகன்பூண்டி, திருநீலகண்டர் வீதியில் செயல்பட்டு வரும் சுகன் சுகா மெடிக்கல் சென்டரின் சாய் கிருபா மெடி டிரஸ்ட்  சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடெமி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கபட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 25 க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு விளையாட்டிற்கான அனைத்து வசதிகளையும் சாய் கிருபா மெடி டிரஸ்ட் செய்து வருகிறது. 

                  இந்தநிலையில்  சுகன் சுகா மெடிக்கல் சென்டர் மற்றும் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து விவேகானந்தர் மராத்தான் 2022 என்னும் மராத்தான் போட்டியை விவேகானந்தர் நினைவு தினமான ஜூலை 3 ந் தேதி நடத்த உள்ளது. இதுகுறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருமுருகன்பூண்டி டே மூன் ரெஸ்ட்டாரெண்ட் பார்ட்டி ஹாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சுகன் சுகா மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் சுந்தரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் கார்த்திகை சுந்தரன் வரவேற்றார். திருமுருகன் பூண்டி முன்னாள் தலைவர் லதா சேகர் குத்துவிளக்கு ஏற்றினார். 

                  விவேகானந்தா சேவாலயா தலைவர் செந்தில் பேசியதாவது : இளைய சமுதாயம் இப்போது சரியான பாதையில் செல்ல முடியாத சூழ்நிலை, எதையும் எதிர்கொள்ளும் திறன், சமூக நோக்கம் தேசப்பற்று சிறிதும் இல்லாத சூழ்நிலை, உடல் பலவீனம், தவறான பழக்கவழக்கங்களில் அதிக ஈடுபாடு போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை இன்றைய இளைய சமுதாயம் சந்தித்து வருகிறது. இதற்கு தீர்வு விவேகானந்தரின் அறிவுரைகளும், சமூக சிந்தனையும், வீரமிக்க வார்த்தைகளும் தான் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும். ஆன்மீகத்தை மட்டும் அவர் கற்றுத்தரவில்லை. வாழ்க்கை எப்படி வாழ்வது என்று உலகிற்கு கற்றுக்கொடுத்தவர். என்றார். 

                  இதனையடுத்து விழா மலரை திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்வேல் வெளியிட விழா மலரை செந்தில் பெற்றுக்கொண்டார். விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சாய்கிருபா ஸ்போர்ட்ஸ் பயிற்சியாளர் பாரதிராஜா நன்றி கூறினார். விழாவினை அத்திக்கடவு ஆனந்தி தொகுத்து வழங்கினார்.                                         விவேகானந்தர் மராத்தான் 2022 குறித்து  சுகன் சுகா மெடிக்கல் சென்டர் மற்றும் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாக இயக்குனர்கள் சுந்தரன், கார்த்திகை சுந்தரன் ஆகியோர் கூறியதாவது : விவேகானந்தர் 120 வது நினைவு நாளை முன்னிட்டு வருகிற ஜூலை  3 ந் தேதி திருப்பூரில் மாவட்ட அளவிலான மராத்தான் போட்டி அவிநாசி, பழங்கரை, பச்சாம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.கே.எல் பப்ளிக் மெட்ரிகுலேசன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. 

                  ஆண்கள், பெண்களுக்கான ஓபன் டு ஆல் என்ற பிரிவில் 21 கிலோமீட்டர் தூரம் அரை மாராத்தானும்,  ஆண்கள், பெண்களுக்கான ஓபன் டு ஆல் என்ற பிரிவில் 10 கிலோமீட்டர் தூரம் மாராத்தானும், 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 கிலோமீட்டர், 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 கிலோமீட்டர் மற்றும்  35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 10 கிலோமீட்டர், அதேபோல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 5 கிலோமீட்டர், 12 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 2 கிலோமீட்டர் என 12 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பணப்பரிசு, பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. 

                  மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க உள்ளோம். மராத்தான் போட்டி எஸ்.கே.எல் பள்ளியில் தொடங்கி பெரியாயிபாளையம் வழியாக பூண்டி ரிங் ரோட்டில் சென்று ஏ.வி.பி பள்ளி, காளம்பாளையம் வழியாக மீண்டும் எஸ்.கே.எல் பள்ளியை வந்தடையும் வகையில் போட்டிக்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு சுகன் சுகா மருத்துவமனை, எஸ்.கே.எல் பள்ளி மற்றும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

Previous Post Next Post