சத்ருவேத்தின் சரவெடியால் ' வெற்றி வாகை சூடியது சீகம் மதுரை பேந்தர்ஸ் ’ பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் கோவையிடமிருந்து வெற்றியப் பறித்த ' மதுரை


நத்தம், ஜூலை.01 :

 ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6 வது சீஸனில் திண்டுக்கல் போட்டி அட்டவணையின் முதல் டபுள் ஹெட்டரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் லகா கோவை கிங்ஸ் அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் 

2 வது வெற்றியை சீகம் மதுரை பேந்தர்ஸ் பதிவு செய்தது முன்னதாக , டாஸ் வென்ற சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸின் ஒப்பனரும் முன்னணி வீரருமான கங்கா ஸ்ரீதர் ராஜூ ( 0 ) ரன் எதுவும் எடுக்காமல் மதுரையின் இளம் வேகப்பந்துவீச்சாளர் சன்னி சந்துவிடம் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து வந்த 

ஐபிஎல் நட்சத்திரம் சாய் சுதர்ஷனும் ( 0 ) அவரிடம் ஆட்டமிழந்து வெளியேறினார் . அடுத்து வந்த லைகா கோவை கிங்ஸின் முக்கிய வீரர்களான ஷிஜித் சந்திரன் ( 9 ரன்கள் ) மற்றும் கேப்டன் ஷாரூக் கான் ( 5 ரன்கள் ) போதிய பங்களிப்பை கொடுக்க முடியாமல் ஆட்டமிழக்க , 

ஓப்பனர் சுரேஷ் குமார் ( 46 ரன்கள் 22 பந்துகள் ) அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார் . கோவையின் இளம் வீரர் முகிலேஷ் ( 50 ரன்கள் 38 ) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி.என்.பி.எல் தொடரில் தனது முதல் அரைசதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்தார் . 

இவர்களைத் தவிர அந்த அணியில் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதளவில் கைகொடுக்க தவறினர் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது . மதுரை சார்பில் அதிகபட்சமாக சிலம்பரசன் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார் . 

அவருக்கு அடுத்தபடியாக இளம் வீரர் சன்னி சந்து 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்ற கிரண் ஆகாஷும் தன் பங்கிற்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார் எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கிய சீகம் மதுரை பேந்தர்ஸை அச்சுறுத்தும் விதமாக அபிஷேக் தன்வார் 

தன்னுடைய முதல் ஓவரிலேயே ஆதித்யா ( 0 ) மற்றும் முக்கிய வீரர் அனிருத் ( 0 ) விக்கெட்களை கைப்பற்றி மதுரை அதிர்ச்சியளித்தார் . ஆனால் அடுத்து வந்த கேப்டன் சத்ருவேத் அனுபவ வீரர் கே.பி அருண் கார்த்திக்குடன் இணைந்து பொறுப்புடனும் அதிரடியாகவும்

விளையாடி இலக்கை நோக்கி விரைவாக சென்றார்.அதோடு டி.என்.பி.எல்லில் தனது 5 வது அரைசதத்தையும் பதிவு செய்தார். 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய அருண் கார்த்திக் ( 38 ரன்கள் 33 பந்துகள் ) மற்றும் சத்ருவேத் ( 75 ரன்கள் 45 பந்துகள் ) 105 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக குவித்தனர். 

கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு 27 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் கைவசம் 7 விக்கெட்கள் வைத்திருந்த மதுரை அணி வெற்றிக் கோட்டையை கிட்டத்தட்ட நெருங்கிய சமயத்தில் அவர்களுக்கு தடுப்புச் சுவராக வந்திறங்கினார் கோவையின் கேப்டன் ஷாரூக்கான். 

ஷாரூக் தனது சுழற்பந்துவீச்சால் ஒரே ஓவரில் சத்ருவேத் , ராஜ்குமார் ( 4 ரன்கள் ) மற்றும் சன்னி சந்து ( 0 ) விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்பமுனை ஏற்படுத்தினார். மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2022 ல் தற்போது 6 விக்கெட்களுடன் பர்ப்பிள் கேப்பை ஷாரூக் கான் தன் வசப்படுத்தியுள்ளார் 

இறுதியில் மதுரை அணியின் ஜெகதீசன் கௌஷிக் ( 27 * ரன்கள் 21 பந்துகள் ) நிலைத்து நின்று விளையாடி அவர்களின் வெற்றியை உறுதி செய்ய சீகம் மதுரை பேந்தர்ஸ் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 தோல்விக்குப்பின் பேசிய கோவையின் கேப்டன் ,  பவர்ப்ளேவை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம் , அதோடு அதிகமான ரன்களை எடுக்க வேண்டிய களத்தில் நாங்கள் அதை செய்ய தவறிவிட்டோம், என்று ஷாரூக் கூறினார் 

இன்றைய ஆட்டநாயகன் விருதை வென்ற மதுரை கேப்டன் சத்ருவேத் பேசுகையில் ,  எங்களின் பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டனர், பேட்டிங்கில் சிறுசிறு தவறுகள் இருந்தாலும் அடுத்து வரும் போட்டிகளில் அதை களைய முயற்சிப்போம்  , என்று அவர் தெரிவித்தார்

Previous Post Next Post