இரவின் நிழல் திரைப்படைத்த விமர்சித்த ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து தீயிட்டு கொளுத்திய புதுச்சேரி ரசிகர்கள்.!


இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் இயக்கிய நடித்துள்ளார். இந்த படமானது நான் லீனியர் சிங்கிள் சாட் மூலம் படமாக்கப்பட்டது என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்  சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்த படம் நான் லீனியர் சிங்கிள் சாட் முதல் படம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் முதல் நான் லீனியர் சிங்கிள் சாட் ஆங்கில படம் இதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறி இந்த படத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார்.


இந்நிலையில் இன்று புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ப்ரோவிடன்ட் மால் தியேட்டரில் படம் பார்த்த புதுச்சேரி நடிகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பார்த்திபன் ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து தவறாக கூறிய ப்ளூ சட்டை மாறன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து செருப்பால் அடித்தும் பின்னர் ஒரு பொம்மையை தீயிட்டு எரித்தும் காலால் உதைத்தும் தனது கண்டனத்தை தெரிவித்தனர்.

புதுச்சேரியில் பார்த்திபன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ப்ளூ சட்டை மாறன் உருவ பொம்மையை செருப்பால் அடித்து எரித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது

Previous Post Next Post