தூத்துக்குடியில் மாநகராட்சி கழிவு நீர் பைப் தோண்டும் போது மண் சரிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி.!


தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் வெள்ளபாண்டி (46), கூலி தொழிலாளியான இவருக்கு, மனைவி மற்றும் 2 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ளனர்.


இவர், இன்று தூத்துக்குடி- ராமேஸ்வரம் சாலையில் உள்ள தருவைகுளம் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், மாநகராட்சி, ஒப்பந்த அடிப்படையில், அங்கு உள்ள தொட்டிக்கு பைப் லைன் போடும் பணியில் 4 பேர் ஈடுபட்டு வந்துள்ளனர்.


அப்போது குழி தோண்டி கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக வெள்ளபாண்டியின் மேல் மண் சரிந்து விழுந்ததில் மூச்சு திணறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயூரிழந்தார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தாளமுத்து நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸில் ஏற்ற முற்பட்டனர்.


இதனை கண்டித்து வெள்ள பாண்டி உறவினர்கள் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றகூடாது என மாநகராட்சியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பின்னர், தூத்துக்குடி DSP சத்யராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வோம் என கூறிய நிலையில், உறவினர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Previous Post Next Post