தூத்துக்குடி : மகளிர் குழுக்கள் சுயமாக தொழில் செய்வதற்கு புதிய முயற்சியாக இரண்டு இடங்களில் பயிற்சி மையங்கள்- அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி.!


தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பல்வேறு கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுய உதவிக் குழுக்கள் கண்காட்சியை பார்வையிட்டார். 


அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை குறித்தான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது. மேலும் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் விழாவையும் மற்றும் பணி நியமன ஆணை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்          

முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில் “கிராமங்களில் மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு போன்ற கட்டமைப்புகளை தாண்டி கிராம பகுதியில் மக்கள் வருவாய் ஈட்டுவதற்காக துவக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு 


கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கை தாண்டி 21 ஆயிரத்து200 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சுய உதவி குழுவினருக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது நிச்சயம் அதனை நிறைவேற்றுவோம்.

முந்தைய ஆட்சியில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் கடலூர், திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சமத்துவபுரங்களை 140 கோடி ரூபாய் செலவில் பழுது பார்க்கும் பணிகள்  நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின்னர் அந்த சமத்துபுரங்கள் தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும். 


தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர்  குழுக்கள் சுயமாக தொழில் செய்வதற்காக புதிய முயற்சியாக இரண்டு இடங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்துவதற்காக 1140 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. 

அதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் விருதுநகர், தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களும் குடிநீர் வசதி பெரும் வகையில் மற்றொரு ஒரு திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. 


கிராமங்களில்  அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி இரண்டு இன் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. என தெரிவித்தார்.

பேட்டியின் போது  மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், வளர்ச்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, ஊரக வாழ்வாதார இயக்க  மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உதவி ஆட்சியர் சரவணன் உள்பட அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Previous Post Next Post