தூத்துக்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் - அமைச்சர் கீதாஜீவன் துவங்கி வைத்தார்.!


தமிழகம் முழுவதும் 11வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்தது இதுபோல் இந்த ஆண்டும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை 

இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்தார் இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் 16 ஆயிரத்து 498 மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி 

தூத்துக்குடியில் உள்ள திரு சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் 236 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி தொடங்கி வைத்தார் 


தொடர்ந்து மாணவிகளின் மத்தியில் பேசிய அமைச்சர் கீதாஜீவன் 

மாணவ மாணவிகளின் நலன்களை பாதுகாக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது எனவும் அந்த வகையில் தான் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவிகள் எதையும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் 

மாணவிகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அந்த பிரச்சினைகளை ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் தெரிவிக்க வேண்டும் மேலும் தமிழக அரசு குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் 1098 என்ற தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளது 

இந்த தொலைபேசியில் மாணவிகள் அழைத்தால் அவர்களுக்கு பிரச்சனைக்கு தீர்வு காண சமூக நலத்துறை மூலமாக உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் எனவே மாணவிகள் எதற்கும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்தார் 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறை அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post