தூத்துக்குடியில் 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் - 6பேர் கைது.!*


தூத்துக்குடி சிப்காட் அருகே கலப்பட டீசல் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி ரூரல் ஏ.எஸ்.பி.சந்தீஸ் தலைமையில் 

சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் அந்தோனிராஜ், போலீஸ் ஏட்டுகள் மாணிக்கராஜா, சாமுவேல், கணேஷ், செந்தில், முத்துப்பாண்டி, திருமணி டென்சிங் மகாலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் 


சிப்காட்  அருகே உள்ள குடோனில் சென்று பார்க்கையில் அங்கு சந்தேகத்திற்கு இடமான நின்று கொண்டிருந்த லாரியை பிடித்து விசாரித்ததில் அவை பெங்களூரிலிருந்து தூத்துக்குடி 35,000 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்து விற்பனைக்காக வைத்து இருந்தது தெரிய வந்துள்ளது.


உடனே போலீசார் கலப்பட டீசல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக நாங்குநேரியைச் சேர்ந்த  பூல்பாண்டியன் மகன் ராஜகோபால் (42), குடியாத்தம் வேணுகோபால் மகன் புஷ்பராஜ் (27), தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஆல்பர்ட் மகன்  பிரவீன் (27), நெல்லை மேலப்பாளையம் குறிஞ்சி மகன் ராமசாமி (30), 


தூத்துக்குடி ராஜகோபால் நகர் தியாகராஜன் மகன் பவுல் அந்தோணி (35), குருஸ்புரம் டெலிங்கர் மகன் டேனியல் (44) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து தப்பி ஓடிய திரேஸ்புரத்தை சேர்ந்த வேலு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குரூஸ் புறத்தை சேர்ந்த டேனியல் என்பவர் திமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post