பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது 15 லட்சம் வங்கியில் செலுத்தபடும் என்ற வாக்குறுதி என்ன ஆனது - கே.எஸ்.அழகிரி பேட்டி.!*


காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். 

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சிரிவெல்ல பிரசாத், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, திருநாவுக்கரசர், மற்றும் முன்னால் மாநில தலைவர் தங்கபாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி மனோகரன் விஜயதாரணி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முரளிதரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பின்னர், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற 7ந் தேதி முதல் 10ம் தேதி வரை ராகுல் காந்தி பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் நோக்கி பிரச்சார பயணம் நடைபெற உள்ளது. 7ந் தேதி முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்களும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் நடைபயணத்தில் பத்தாயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். 

இந்த நடைபயனமானது, பாஜக தவறான பொருளாதாரத்தை எதிர்த்தும், இந்தியாவில் மனிதர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற காந்திய தத்துவத்தை வலியுறுத்தி நடைபெற உள்ளது. 

இது மிகப்பெரிய தேசிய புரட்சியாக கருதப்படுகிறது. இதை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள சீர்திருத்தவாதிகள் புரட்சியாளர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள். 


தமிழகத்தில் பாரதிய ஜனதா 23 இடங்களை தேர்தலில் கேட்டு பெற்றது. ஆனால் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் இன்றைய தலைவரும், அன்றைய தலைவரும் வெற்றி பெறவில்லை. ஆனால் காங்கிரஸ் 25 இடங்களை தேர்தலில் சந்தித்து 18 இடங்களை வெற்றி பெற்றது. இதில் எங்களுடைய வெற்றி சதவிகிதம் 72 ஆகும்.

காங்கிரஸ்-க்கும் ஒரு திராவிட கட்சி துணையாக இருந்தது, பாஜகவிற்கும் ஒரு திராவிட கட்சி துணையாக இருந்தது, அப்பொழுது மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தனர். மாநிலத்திலும் கூட்டணி ஆட்சியில் இருந்தனர்.


காங்கிரஸ் மத்தியிலும் ஆட்சியில் இல்லை, மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. ஆனாலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இதிலிருந்து யார் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் யார் பலம் பெற்று இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு இந்தியா முழுவதிலும் உள்ள எங்களைப் போன்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.


திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 5 வருடத்திற்கானது. அதற்குள்ளாக அனைத்து வாக்குறுதிகளை பற்றியும் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. 

அது போன்று தான் ஆயிரம் ரூபாய் இல்லத்தரசிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்துவது என்பதும், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றார்கள். ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது அது அந்த வாக்குறுதி என்னவானது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மெல்ல மெல்ல எறும்பு ஊர பாறையும் தேயும் என்பது போல தனது திட்டங்களை மெது மெதுவாக நிறைவேற்றி வருகிறார் அதை நான் பாராட்டுகிறேன் வரவேற்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சி ஊழலற்ற ஆட்சி நடத்தி வருவதாக கூறுவது தவறு, குற்றச்சாட்டு ஊழல் வழக்கு அவர்கள் மீது உள்ளது.


குலாம் நபி ஆசாத் பற்றி கூறும்பொழுது அனைவரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாங்கள் மாற வேண்டிய சூழ்நிலை வரும்போது தலைமை மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். 

பாஜக அரசு பத்மபூஷன் விருதை  இருவருக்கு வழங்கினார். அதில் ஒருவர் குலாம் நபி ஆசாத் மற்றொருவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த புத்ததேவ் பட்டாசார்ஜியார்க்கும் வழங்கினார். இதில் புத்ததேவ் பட்டாசார்ஜியார்க்கும் விருது பெற தகுதி உடையது. 

ஆனால், விருதை வழங்குபவர் தகுதியில் சிறியவர், அதனால் எனக்கு அந்த விருது வேண்டாம் என்றார். அதே சமயம் குலாம் நபி ஆசாத் விருதினை பெற்றுக் கொண்டார். இதிலிருந்து தெரிகிறது அவர் என்ன எதிர்பார்த்து இருப்பார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடும் காட்டமாக கூறினார்.

Previous Post Next Post