கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது- 7பவுன் தங்க நகை மற்றும் வாகனம் பறிமுதல்.!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் துவரந்தை பகுதியை சேர்ந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி (24) மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 26.06.2022 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வரும் போது, 

குளத்தூர் வழ வேம்பார் கடற்கரை சாலை சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மேற்படி கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளனர். 

இதுகுறித்து கிருஷ்ணவேணி அன்று அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எப்போதும்வென்றான் பேருந்து நிலையம் அருகில் சந்ததேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், 

அவர்கள் எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர்களான திருமலை மகன் கலைச்செல்வன் (25) மற்றும் மன்மதராஜ் மகன் கார்த்தி (27) ஆகியோர் என்பதும், அவர்கள் கிருஷ்ணவேணியிடம் தங்க நகைகளை பறித்து சென்றதும்  தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக  போலீசார் கலைச்செல்வம் மற்றும் கார்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 5 பவுன் தாலிச் செயின் மற்றும் 2 பவுன் தங்க செயின் என மொத்தம் ரூபாய் 1,40,000/- மதிப்புள்ள 7 பவுன் தங்க நகைகள் மற்றும் TN 69 BP 9241 (Bajaj Pulsor) என்ற இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட  கலைச்செல்வம் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், கார்த்திக் மீது கடம்பூர், குளத்தூர் மற்றும் எப்போதும்வென்றான் ஆகிய காவல் நிலைங்களில் 4 வழக்குகளும் உள்ளது குறிப்பிடதக்கது.

மேற்படி செயின் பறிப்பில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்து தங்க நகைகளை மீட்ட விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

Previous Post Next Post