ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சி நடப்பதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. - பி.ஆர் பாண்டியன்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக அனைத்து விவசாய சங்கம் சார்பில் விவசாயிகளின் பிரச்சனை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு  குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பேசுகையில்

இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான இலவசங்களை நிறுத்துவது என்பது மிகப்பெரிய துரோக செயல். விவசாயம் என்பது சேவையே தவிர தொழில் இல்லை. இதனை இலவசம் என குறிப்பிடுவது பிற்போக்குதனமான செயல்.


தென்மேற்கு பருவமழை பெய்தும் நெல்லை, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நீர் நிலைகள்,  நிரம்பவில்லை. எனவே இந்த மூன்று மாவட்டங்களுக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நீர் நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து,  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியில் ஏற்றுமதி முனையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழகத்தின் நதிநீர் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ததை வரவேற்கிறோம். இதனை வெறும் எழுத்து பூர்வமாக காகிதத்தில் தாக்கல் செய்தால் மட்டும் விவசாயம் வளர்ந்து விடாது.

வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது யானைப் பசிக்கு சொளப்போறி போன்றது. இந்த நிதியை வைத்து வேளாண்மை உற்பத்தியை பெருக்க முடியாது.


ஒரு மூட்டை யூரியாவை அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

குடிமராமத்து திட்டம் விவசாயிகளுக்கு மிக பெரிய பலனை தந்தது. இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதாக விவசாயிகள் அஞ்சுகின்றனர். தமிழக முதல்வர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Previous Post Next Post