அமமுக சார்பில் திருப்பூரில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்..... துணை பொது செயலாளர் சி.சண்முகவேலு அழைப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூர் மாநரில் வருகிற செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வருகிறார். 

இதுகுறித்தான திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 13 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கொங்கு மண்டல நிர்வாகிகள்  ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் வெள்ளியங்காட்டில் உள்ள சிவளா மண்டபத்தில் நடைபெற்றது. கழக தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தாங்கிப் பேசினார்.

  இந்த கூட்டத்தில்அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

கழக அமைப்புச்செயலாளரும், கோவை மேற்கு மாவட்ட செயலாளருமான சேலஞ்சர் துரை, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், முன்னாள் எம்.பி.,சுகுமார், கழக அமைப்பு செயலாளர் தேனாறு லட்சுமணன், கழக அமைப்பு செயலாளர் துளசிமணி, வெளிநாடு வாழ் தமிழர் அமைப்பு செயலாளர் செந்தில், மாநில நெசவாளர் அணி செயலாளர் தரணி சண்முகம், அமைப்பு செயலாளார், முன்னாள் எம்.எல்.ஏ., ரோகிணி, அமைப்பு செயலாளர் துளசிமணி, கோவை மத்திய மாவட்ட செயலாளர் அப்பாதுரை, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர்,  திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், ஈரோடு மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்,ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் செல்வம் என்கிற சதாசிவமூர்த்தி,ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வேலுசாமி, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாத்,  நீலகிரி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.


அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு பேசும்போது கூறியதாவது:

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருப்பூர் மாநகரில் நடக்க இருக்கிறது. பொதுச்செயலாளர் அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று அவர் உரையாற்றி இருந்தாலும் கூட, கடந்த மாதத்தில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

மேலும் அவர் கோவைக்கு வந்த போதும் மாபெரும் எழுச்சி உருவானது. நமது பொதுச்செயலாளர் அவர்கள் தொழிலாளர் அதிகமாக இருக்கக் கூடிய திருப்பூரில் ஒரு எழுச்சி உருவாகக் கூடிய அளவில் இந்த பொதுக்கூட்டம் நடத்த உத்தரவிட்டிருக்கிறார். கொங்கு பகுதி ஒரு சிலருக்கு என்று ஆகி விட்டதாக கூறப்படும் நிலையில் தான், திமுகவும், 

கொங்கு பகுதியில் கால் வைக்க முயலும் இந்த நேரத்தில் தான் நாம் ஒரு சவாலாக ஏற்று இந்த கூட்டத்தினை நடத்த இருக்கிறோம். நமது பொதுச்செயலாளர் அவர்கள் உத்தரவில் நடக்கிற அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தினை மாநாடு போல நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் 13 மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் இதில் பங்கேற்று இருக்கிறார்கள். 

ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் நிர்வாகிகளை அழைத்து இந்த கூட்டத்திற்கு எப்படி மக்களை அழைத்து வருவது என்று அங்கங்கு ஆலோசனை நடத்திட வேண்டும். பொதுக்குழுவிற்கு பின்னாடி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக பொதுசெயலாளர் தெரிவித்த்து விட்டார். 

நம் கட்சியில் அனைவரும் உதவி செய்யும் மனப்பான்மையுடன் இருக்கிறோம். அனைத்து நிர்வாகிகளும் சொன்னதோடு நிற்காமல் வாகனங்கள், வசதிகளை ஏற்பாடு செய்து பொதுக்கூட்டத்திற்கு தங்கள் பகுதியில் இருந்து அனைவரையும் அழைத்து வர வேண்டும். 

குறைந்தது 20 ஆயிரம் பேராவது இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும், இதை ஒரு சவாலாக எடுத்து செய்ய வேண்டும். ஒன்றியம், பேரூர், ஊராட்சி என அனைத்து பகுதிகளில் இருந்தும் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் அழைத்து வர வேண்டும். 

காசு கொடுத்து யாரையும் அழைத்து வர வேண்டாம். ஆர்வமுடன் இருக்கக்கூடியவர்களை அழைத்து வாருங்கள். மாபெரும் எழுச்சியுடன் இந்த கூட்ட்டம் நடைபெற அனைவரும் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு பேசினார். 

திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது:செப்டம்பர் 15ம் தேதி  திருப்பூர் மண்ணில் கழகத்தின் பொதுச்செயலாளர், மக்கள் செல்வர் பண்பாளர் அண்ணன் டிடிவி தினகரன் உரையாற்றுகிறார். 

மக்கள் செல்வரின் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நம் மண்ணில் நடைபெறுவது நமக்கு பெருமையான விஷயமாகும். இந்த நேரத்தில் கழக நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த தயாராக வேண்டும். நாம் செய்கிற விளம்பரங்களை காட்டிலும், அடுத்தவர்களை ஈர்க்கிற ஆர்வத்தை காட்டிலும் 

இந்த கொங்கு மண்டல த்தில் உள்ள அத்தணை மாவட்டங்களிலும் பட்டி தொட்டி எல்லாம்  இருக்கிற பொதுமக்களை கூட்டி வந்து  மக்கள் செல்வர் பண்பாளர் அண்ணன் டிடிவி.தினகரன் அவர்களின் பேச்சினை கேட்க செய்ய  வேண்டும். என்பதுதான் நம்முடைய முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும். ஏனென்றால் பெரியாரை அண்ணா சந்தித்த மண் இந்த திருப்பூர் மண்.

தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவை பார்த்தவுடன் கேட்டார், தம்பி படிக்க விருப்பமா என்று கேட்டார். அதற்கு பேரறிஞர் அண்ணா அரசியல் தான் விருப்பம் என்று கூறினார் எனவே தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவை ஈரோட்டுக்கு தன்னுடன் அழைத்துச் சென்று தன்னுடைய பத்திரிகையில் பணியமர்த்தினார். 

ஒரு சாதாரண படித்த பையன் தான் என்று வைத்துக் கொள்ளாமல் பெரியார் அண்ணாவை தட்டிக் கொடுத்து தட்டிக் கொடுத்து இந்த திராவிட இயக்கத்தினை உருவாக்கினார். பட்டி தொட்டி எல்லாம் இந்த திராவிட இயக்கம் வளர்வதற்கு காரணமாக இருந்தார் பேரறிஞர் அண்ணா. அந்த வகையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த திருப்பூர் மண்ணில், 

நம்முடைய தலைவர் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் உரையாற்றிட இருக்கிறார், மீண்டும் மீண்டும் நான் உங்களிடத்திலே அன்புடன் கேட்டுக் கொள்வது எல்லாம் முடிந்தவரை கூட்டத்தினை கூட்டிவர செய்யுங்கள். அடுத்த தேர்தலின் போது ஒரு பிரதமரை உருவாக்கக் கூடிய இடத்தில் இருப்போம். 

இவ்வாறு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் அ.விசாலாட்சி பேசினார். இந்தக் கூட்டத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள 13 மாவட்டங்களின் மாவட்ட. நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மாநகர, பகுதி, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக பங்கேற்றார்கள்.

Previous Post Next Post