திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரத்னா முன்னிலை வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்ப மேரி வரவேற்றார்

. கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : 

                பள்ளியில் இருந்து குறைந்தது 10 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவிகளை கண்டறிந்து, வராமல் இருக்கும் காரணத்தை கண்டறிந்து அதன் தன்மைக்கு ஏற்ப ஆலோசனை செய்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்வது. பள்ளிக்கு அருகே பின்புறமுள்ள  கேட் வழியாக அரசு டவுன் பஸ்கள் நின்று செல்ல தக்க நடவடிக்கை எடுப்பது. நஞ்சப்பா பள்ளி சாலையில் உள்ள ரோடுகளுக்கு முன்பு உள்ள வாகனங்களை அகற்ற காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பது. 
             
    நீட், சட்டப் படிப்பு,  சி.ஏ போன்ற உயர் படிப்புகளுக்கு உரிய ஆசிரியர்களை நியமித்து மாணவிகளுக்கு தக்க பயிற்சிக்கான ஏற்பாடு செய்வது.  பள்ளி வளாகத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது. வாரம் இரு முறை கொசுக்களை ஒழிக்க கிருமி நாசினியை பள்ளி வளாகத்தை சுற்றி அடிக்க நடவடிக்கை மேற்கொள்வது கொள்வது. பள்ளியில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்து சென்ற மாணவிகளுக்கு கல்லூரி உட்பட உயர் கல்வி கற்க கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
                
 இதனைத்தொடர்ந்து ஆசிரியர் பயிற்றுனர் ரோஹிணி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுத்தார். அதில் குழந்தைகள் வாழவதற்கான உரிமைகள், குழந்தைகள் மனதளவில் வளர்ச்சிக்கான உரிமைகள், பயமில்லாமல் பாதுகாப்பு  வாழ்வு குறித்த உரிமைகள், விளையாட்டு உள்பட பல்வேறு நிகழ்வுகளில் மாணவிகளை பங்கேற்க வைப்பதன் உரிமைகள் மற்றும் அரசு பள்ளியில் படிப்பதனால் மாணவிகளுக்கு கிடைக்கும் பலன்கள், அதேபோல் மாணவிகளுக்கு கிடைக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக பேசினார். 
                
 கூட்டத்தில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் சத்தியவதி, பத்மபிரியா, தேன்மொழி, சுதா, விமலா, பிரமுஅம்மாள், முத்தமிழ்செல்வன், கிருஷ்ணமூர்த்தி, சபியுல்லா, ஐயப்பன் மற்றும் ஆசிரியப் பிரதிநிதி  சர்வேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post