கம்ப்ரஸ் பண்ணின புதுவெள்ளமும்.. சுழல் காத்தும்... இம்ப்ரஸ் பண்ணுமா? - பொன்னியின் செல்வன் விமர்சனம்

ஆயிரம் வருஷத்து சோழ வரலாற, 5 பாகமா, அரை நூற்றாண்டே சொக்கிப்போற மாதிரி கற்பனயை கலந்து எழுதி வச்சுருந்தாரு கல்கி. இன்னிக்கு வரைக்கும் புத்தக கண்காட்சிகளிலும், வாசிப்பவர்கள், பேச்சாளர்கள் என பலராலும் பேசப்படும் ஒரு கதை தான் பொன்னியின் செல்வன். அந்தளவுக்கு பொன்னியின் செல்வனில் வார்த்தைகளிலும், வர்ணனைகளிலும் விளையாடுவார் கல்கி. எல்லையில்லா கற்பனை கடலுக்கு எக்கச்சக்க தீனி போட்டிருப்பாரு மனுஷர்.

இந்தக்கதைய தழுவி மணிரத்தினம் எடுத்த சினிமாப்படமான பொன்னியின் செல்வன் இன்னிக்கு வெளியாகி இருக்கு. இரண்டு பாகங்களா வெளியிட முடிவு பண்ணி முதல் பாகம் ரிலீஸ் ஆகி இருக்கு. இந்தப்படம் வெளியாகுறதுக்கு முன்னாடியே 3 நாளைக்கான அட்வான்ஸ் புக்கிங் எல்லாமே முடிஞ்சு போச்சு..

 பொன்னியின் செல்வன் புத்தகம் படிச்ச வாசகர்களும், படிக்காதவர்களுமாக பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் புக்கிங் பண்ணிட்டாங்க.. இன்னமும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்பதெல்லாம் உண்மை தான்.

பொன்னியின் செல்வன் கதை பலருக்கும் தெரியும் என்பதால் நேரடியா படம் எப்டி இருக்குன்னு பார்க்கலாம். 

ஏற்கனவே பாகுபலி-2 படத்தை பார்த்துட்டு பலரும், ரத்தம் சூடேற, நரம்பு புடைக்க வெறி கொண்டு தெரிக்க விடும் திரைக்கதையை எதிர்பார்த்து தான் தியேட்டர்ல போய் உட்கார்ந்துருப்பாங்க. ஆனால் பொன்னியின் செல்வன் வேற ஸ்டைல், மணிரத்னம் வழக்கம் போல அவர் ஸ்டைல்ல படம் பண்ணிருக்கார்.. 

ஆரம்பமே ராஷ்டிரகூட போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனும், வந்தியத்தேவனும் அதகளம் பண்ணுகிறார்கள்.

பொன்னியின் செல்வன் நாவல் முழுசையும் கம்ப்ரஸ் பண்ணி படம் எடுத்தாலும், நிறைய காட்சிகளை கல்கியின் திரைக்கதைய அப்படியே ஓட விட்டிருக்கார். 

ஆதித்த கரிகாலனா வர்ற விக்ரம் வேற லெவல்.. நடிப்பில் பின்னி இருக்கார். 

வந்தியத்தேவன் கேரக்டர் கார்த்திக்கு அப்படியே பொருந்தி போகுதுங்க.. இதுமாதிரி பல படங்களில் ஜோவியலான கேரக்டரில் நடித்திருப்பதால் அப்படியே அள்ளி சாப்பிட்டு விட்டார். ரசிச்சுக்கிட்டே இருக்கலாம்.

பழுவேட்டரையராக நாவலில் மிரட்டின அளவுக்கு திரையில் கொஞ்சம் கம்மியாகத்தான் மிரட்டுகிறார் சரத்குமார். தோற்றத்தில் கம்பீரமா வந்தாலும், மணிசார் இவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.

சுந்தர சோழனாக படுக்கையில் பிரகாஷ் ராஜ் அவரது வேலையை கச்சிதமாக செஞ்சிருக்காரு. மந்திரவாதி ரவிதாசனா வர்ற கிஷோர் சூப்பர்.. 

ஜெயராம் ஆழ்வார்க்கடியான் நம்பியாக அசத்துக்கிறார்.

வானதி கேரக்டர் பேரளவுக்குத்தான்.. 

பூங்குழலியா வர்ற பொண்ணு ஐஸ்வர்யா லட்சுமி... படகோட்டுறதும், பாய்மரம் கட்டுறதும் என்னமா ஸ்டைல் காட்டுது.. பாத்துக்கிட்டே இருக்கலாம் போங்க..  

த்ரிஷாவும், ஐஸ்வர்யா ராயும் குந்தவையாகவும், பழுவூர் இளையராணியாகவும் அழகுப்பதுமையாக வலம் வருகிறார்கள். நந்தினி கேரக்டர் எதிர்பார்த்த அளவுக்கு மனசுல பதியல.. அடுத்த பார்ட்ல இன்னும் அந்தம்மாவுக்கு நிறைய வொர்க் இருக்கும்.. பார்க்கலாம்.

கேரக்டர்களுக்கு பஞ்சமே இல்ல.. நிறைய பேர் இருக்காங்க படத்துல.. 

பொன்னி நதி பாக்கணுமே பாட்டுல ஒட்டுமொத்த சோழநாட்டோட வளமும் காட்ட கஷ்டப்பட்டிருக்காங்க.. பாட்டு, மியூசிக் எல்லாமே நல்லாருக்கு.. 

 சோழா.. சோழா.. பாட்ட கேட்டுட்டு பலபேர்,  போர்க்கள காட்சிகள் பாகுபலியை எல்லாம் தோற்கடிக்கப் போகுதுன்னு நினைச்சுட்டு படம் பார்க்க போயிருப்பாங்க.. போர்க்கள காட்சிகள் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்..

பாடலாசிரியர்களை பாராட்டணும்.. வரிகளில் விளையாடி இருக்காங்க... சோழா.. சோழா..பாட்டிலேயே மனுசன உசுப்பேத்தி விடுறார்ங்க. ‘கூஸ்பம்ஸ்...”

பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனின் வார்த்தை ஜாலங்கள் படத்துக்கு பிளஸ்.

ஏ.ஆர்., ரஹ்மான் இசை பாடல்களுக்கு நல்லாருக்கு... ஆனா நிறைய இடங்கள்ல படம் சத்தம் இல்லாம போகுது.. என்ன பேக்ரவுண்ட் மியூஸிக் போட்டாருன்னு தெரியல. 

வெறி கொண்டு பேச வேண்டிய வசனங்களை கூட கேரக்டர்கள் கமுக்கமா பேசி அடக்கி வாசிக்கிறாங்க... இது வழக்கமான மணிரத்னம் ஸ்டைல் தான்.

கல்கியின் கதையில் சின்னச்சின்ன ஆல்ரேசன் பண்னிருக்காங்க.. ஓகே தான்.

புத்தகத்துல படிச்சவங்களுக்கு இவங்க தான் இந்த கேரக்டர்ன்னு தெரியும்.. ஆனா புதுசா படம் பார்க்கறவங்களுக்கு கேரக்டர்கள் யார்ன்னு தெரிறது கஷ்டம். 

புதுவெள்ளமும், சுழல் காத்தும் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம் தான்.. கிளாசிகல் ஸ்டைல்ல.. மைல்டா பண்ணிருக்கார் மணிரத்னம்.

நிறைய சீன்ல ரசிகர்கள் சத்தத்தையே காணோம்..

பெரிய பட்டாளத்தை வச்சு ஹேண்டில் பண்ணிருக்காங்க..

தாய்லாந்து, இலங்கை, ஹைதராபாத், ராஜஸ்தான்னு படம் எடுத்த இடங்கள் கண்ணுக்கு விருந்து தான். போர்க்கள காட்சிகளில் தளபதிகள் போட்டிருக்கும் அணிகலன்கள், ஆயுதங்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். \

படத்தில் நிறைய மேன்பவர் யூஸ் பண்ணி பண்ணிருக்காங்க. ஆனாலும் சி.ஜி., இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்னு தோணும்.

மொத்ததில் எப்படிப்பார்த்தாலும் பொன்னியின் செல்வன் பர்ஸ்ட் பார்ட் ஒரு இண்ட்ரோ மாதிரி தான் பண்ணிருக்காங்க... செகண்ட் பார்ட் இன்னும் நல்லாருக்கும்னு தோணுது... பார்க்கலாம்..

பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்கள் பலரும், அரைமனதோடு சொன்னாலும் படம் வேறலெவல்ன்னும், சூப்பர்ன்னும் சொல்றாங்க...

எல்லோருடைய கற்பனைக்கும் காட்சிகளில் தீனி போடுறது கஷ்டம் தான்

மொத்தத்தில் பொன்னியின் செல்வன் பாதி ’கூஸ்பம்ஸ்’..

-mani

#PS Review #Ponniyin_selvan Review #பொன்னியின்_செல்வன்ப்-விமர்சனம்



Previous Post Next Post