பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திடீர் சாலை மறியல்: தூத்துக்குடியில் பரபரப்பு!


தூத்துக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் சென்னை, கோவை, ஏர்வாடி, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் அதன் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி நிர்வாகிகள், தொண்டர்கள், இன்று காலை டபிள்யூஜிசி ரோட்டில் பள்ளிவாசல் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மத்தியபாகம் சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Previous Post Next Post