தூத்துக்குடி பிரஸ் கிளப் : சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாநகராட்சி மேயர் - புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து.!


தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி பிரஸ் கிளப்பிற்கு திடீர் விசிட் செய்த நிலையில், புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி பிரஸ் கிளப்  நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி  மாநகராட்சியின் மேயர் ஜெகன் பெரியசாமி இன்று தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்திற்கு வருகை தந்தார். புதிய நிர்வாகிகளை பாராட்டும் விதமாக அலுவலகத்தில் இருந்த மன்றத்தின் செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் மாரிமுத்து ராஜா துணை தலைவர் லட்சுமணன் இணை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். 
தலைவர் காதர் மைதீன் பணி நிமித்தமாக வெளியில் சென்றிருந்ததால் அவருக்கு மேயர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.தொடர்ந்து அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Previous Post Next Post