நிதி நிறுவனத்தில் பணம் மோசடி செய்யப்பட்ட வழக்கு -பாதிக்கப்பட்டவர்கள் 15 தினங்களுக்குள் பணத்தை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு.!

 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில்  நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்யப்பட்ட வழக்கில் மேற்படி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து திரும்பப் பெறாமல் உள்ளவர்களின்  பணத்தை மதுரை, சிறப்பு பொருளாதார நீதிமன்றத்தில் 15 தினங்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறு  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் 1992 முதல் 2002 வரை இயங்கி வந்த ராமகிருஷ்ணா பைனான்ஸ் மீதான வழக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண். 02/2003 ஆக பதிவு செய்யப்பட்டு தற்போது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் விசாரணை நடைபெற்று இவ்வழக்கானது மதுரை சிறப்பு பொருளாதார நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

எனவே மேற்படி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்ப பெறாமல் உள்ள

1) ஆத்தூர் மேற்கு தெருவை சேர்ந்த வீரபாண்டியன் மகள் புஷ்பம் என்பவருடைய பணம் ரூபாய் 30,000/-,

 2) ஆத்தூர் என்.கே பில்டிங் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணஐயர் மகன் பாலசுப்பிரமணியன் என்பவருடைய பணம் ரூபாய் 45,000/-,

3) முக்காணி முதலியார் தெருவை சேர்ந்த லட்சுமணமுதலியார் மகன் வேலாயுதமுதலியார் என்பவருடைய பணம் ரூபாய் 40,000/-,

4) முக்காணி முதலியார் தெருவை சேர்ந்த வேலாயுதமுதலியார் மனைவி சுப்பம்மாள் என்பவருடைய பணம் 22,000/-,

5) முக்காணி யாதவர் தெருவை சேர்ந்த வெள்ளகோனார் மகன் புலமாடன் என்பவருடைய பணம் ரூபாய் 13,000/-,

6) முக்காணி வண்டிமலச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பமுதலியார் மனைவி லட்சுமியம்மாள் என்பவருடைய பணம் ரூபாய் 3,000/- மற்றும்

 7) முக்காணி பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் மாரிமுத்து என்பவருடைய பணம் ரூபாய் 11,000/-

மேற்கண்ட 7 நபர்களின் டெபாசிட் பணம் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு பொருளாதார நீதிமன்றத்தில் இருப்பதால், சம்மந்தப்பட்டவர்களோ அல்லது வாரிசுகளோ இவ்வறிக்கையை பார்த்த 15 நாட்களுக்குள் தகுந்த ஆவணங்களுடன் மேற்படி நீதிமன்றத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post