தூத்துக்குடி 3ஆம் புத்தக திருவிழா ரூ.1.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை.!

தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மஹாலில் தூத்துக்குடி 3ஆம் புத்தகத் திருவிழா நிறைவு விழா மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நேற்று (29.11.2022 நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 3வது புத்தக திருவிழா தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மஹாலில் 22.11.2022 முதல் 29.11.2022 வரை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் (பபாசி) இணைந்து நடத்தப்பட்டது. இப்புத்தகக் திருவிழாவில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக 45 புத்தக அரங்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் சார்பாக அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 07 அரங்குகளும், உள்ளூர் பதிப்பகத்தார் சார்பாக புத்தக அரங்குகளும் மற்றும் 09 உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது.

இப்புத்தகக் கண்காட்சியை பார்வையிடவும் புத்தகங்கள் வாங்குவதற்கும் அனைத்து தரப்பு பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், புத்தகப் பிரியர்கள் ஆகிய அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் 24 மணி நேரமும் புத்தகங்களைப் படிக்கும் வகையில் ஒரு தனியான புத்தக அரங்கு அமைக்கப்பட்டது. இந்த அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து 24 மணிநேரமும் புத்தகங்களை விடுதிகாப்பாளர்கள் மேற்பார்வையில் படித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இந்தபுத்தக அரங்கு புத்தகங்களைப் படிப்பது பற்றிய ஒரு ஆழமான விழிப்புணர்வினை ஏற்படுத்தியது, இப்புத்தகக் கண்காட்சியின் தனித்துவமாக விளங்கியது.

இப்புத்தகக் கண்காட்சியில் ரூ.1.20 கோடி மதிப்பில் புத்தகங்கள் பொதுமக்களுக்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் இப்புத்தகக் கண்காட்சியை பார்வையிடுவதை ஊக்குவிக்கவும், புத்தக வாசிப்பை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும் புத்தகம் வாங்கும் முதல் 3 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு முறையே ரூ.1,00,000/-, ரூ.50,000/- மற்றும் ரூ.25,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்ற அதிர்ஷ்டப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், புத்தகம் வாங்கும் அதற்கான இரசீதனை நபர்கள் பரிசுக் கூப்பனுடன் இணைத்து அதிர்ஷ்ட குலுக்கல் பெட்டியில் போடவேண்டும். இப்புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளன்று குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளாக 3 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பழையகாயலை சேர்ந்த திரு.முகமது ஜியாவுதீன் என்பவருக்கு (குறிப்பு எண்.10047) முதல் பரிசு ரூ.1 இலட்சம், கோவில்பட்டியை சேர்ந்த திரு.மு.வேல்சாமி என்பவருக்கு (குறிப்பு எண்.11254) 2வது பரிசு ரூ.50,000/-, தூத்துக்குடியை சேர்ந்த திருமதி.ப.ராஜலட்சுமி என்பவருக்கு (குறிப்பு எண்.7771) 3வது பரிசு ரூ.25,000/- வழங்கப்பட்டது.

இதுதவிர, புத்தகக் கண்காட்சி நடைபெற்ற அனைத்து நாட்களும் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகளுக்கு இடையிலான கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட்டது. இப்போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 வட்டாரங்களிலிருந்தும் பள்ளிகள் இப்போட்டியில் கலந்துகொண்டன. ஒவ்வொரு நாளும், 2 வட்டாரங்களிலுள்ள பள்ளிகள் இப்போட்டிக்கு அழைக்கப்பட்டன.இந்தப் போட்டியில் கட்டுரை, ஓவியம் வரைதல், கிளாசிக்கல் நடனம், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், இசைப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் மேற்படி பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேற்கண்ட போட்டியில், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 2 போட்டியாளர்கள் இறுதி நாளில் மெகா இறுதி போட்டியில் கலந்துகொண்டனர்.

கட்டுரைப்போட்டியில் ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி நொபிகா ஷாலிகா முதல் பரிசும், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி நேத்ரா 2வது பரிசும், ஒட்டப்பிடாரம் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கவிதா 3வது பரிசும் பெற்றனர்.

ஓவியப்போட்டியில் சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் ஸ்ரீசத்ய பாலா முதல் பரிசும், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் அந்த்ரேயா 2வது பரிசும், நாலுமாவடி காமராஜ் உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி மேகலா வனிதா 3வது பரிசும் பெற்றனர்.

செவ்வியல் நடனப்போட்டியில் தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி தர்ஷினி முதல் பரிசும், கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி எம்.விஷாலி 2வது பரிசும், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி ரீணா 3வது பரிசும் பெற்றனர்.

நாட்டுப்புற நடனப்போட்டியில்(தனி) ஓட்டப்பிடாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி முத்து மலர் முதல் பரிசும், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி வாணிகா சுபாஷ் 2வது பரிசும், செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரோஷன் 3வது பரிசும் பெற்றனர்.

நாட்டுப்புற நடனப்போட்டியில்/குழு) சுப்பம்மாள்புரம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளி குழுவினர் முதல் பரிசும், விளாத்திகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி குழுவினர் 2வது பரிசும், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி குழுவினர் 3வது பரிசும் பெற்றனர்.

நாட்டுப்புறப்பாடல் போட்டியில் கோவில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி ஆஷா முதல் பரிசும், தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி மிராக்ளின் சிலேஷர் 2வது பரிசும், விளாத்திகுளம் புனித சார்லஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் எம்.எம்.ஷடோனிக்ஸ் 3வது பரிசும் பெற்றனர்.

செவ்வியல் பாடல் போட்டியில் ஆறுமுகநேரி கமலாவதி உயர்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி பாபு முதல் பரிசும், தூத்துக்குடி விக்டோரியா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிரோபின், சரண்யா ஜெனிட்டா ஆகியோர் 2வது பரிசும் பெற்றனர்.

இசைக்கருவி மீட்டல் (செவ்வியல்) போட்டியில் செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிஹர சுப்பிரமணியன் முதல் பரிசும், கொம்மடிக்கோட்டை ஸ்ரீ காஞ்சி சங்கர பகவதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் ராகவன் ராஜா 2வது பரிசும், கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் எம்.எம்.கௌதம் 3வது பரிசும் பெற்றனர்.

இசைக்கருவி மீட்டல் (நாட்டுப்புறம்) போட்டியில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி குழுவினர் முதல் பரிசும், கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி நாகஜோதி 2வது பரிசும் பெற்றனர்.

பேச்சுப்போட்டியில் (உடனடி தலைப்பு ) ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயராணி முதல் பரிசும், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி 2வது பரிசும், தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவர் தேவிநேயா 3வது பரிசும் பெற்றனர். பேச்சுப்போட்டியில் புதுக்கோட்டை டிடிடிஏ பி.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி ஷைனிஷா ஷெரின் முதல் பரிசும், நாகலாபுரம் சீனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீசெல்லம் 2வது பரிசும், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி 3வது பரிசும் பெற்றனர்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில், தமிழகத்தின் தலைச்சிறந்த மேடைப்பேச்சாளர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் பல்வேறு தலைப்புகளில் மிகத் தீர்க்கமான சிறப்புரையாற்றினார்கள். இதன்மூலம் பொதுமக்களிடத்திலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடத்திலும் புத்தகம் வாசிப்பது தொடர்பாக ஆழமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்புத்தகக் கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், புத்தக ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் மேடைப் பேச்சாளர்கள் என சுமார் 1 இலட்சம் நபர்கள் பார்வையிட்டனர்.

இந்தபுத்தகத் திருவிழாவில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எழுத்தாளர் திரு.முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களால் எழுதப்பட்ட "தூத்துக்குடி மாவட்ட அறியப்படாத தியாகிகள்" என்றபுத்தகம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.

இப்புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், சமூகநலத்துறை அமைச்சர் , மீன்வளத்துறை அமைச்சர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் , சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் விருந்தினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், அனைத்து புத்தக வெளியீட்டாளர்கள்/விநியோகஸ்தர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள், தட்டப்பாறை ஆதரவற்றோர் இல்ல வரவேற்பு இசைக்குழுவினர், காவல்துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் , தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான் , தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார்,மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post