உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் முழுவதும் ஆட்டோக்களில் வாழ்த்து விளம்பர ஸ்டிக்கர் - அசத்திய வக்கீல் ஜோயல்.!

 

திமுக 1949 செப்டம்பர் 15ல் சென்னை ராபின்சன் பூங்காவில் உதயமான நாட்களுக்கு பிறகு கட்சியின் வளர்ச்சிக்கும் அதன் செயல்பாட்டுக்கும் மிகப்பெரிய பங்காக இளைஞரணி திகழ்ந்து வருகிறது. 1960ம் ஆண்டுகளின் இறுதியில் மு.க.ஸ்டாலின் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த போது கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்த அமைப்பின் பேரில் பல கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், அது கட்சியின் விதிகளின்படி உருவாக்கப்பட்ட அமைப்பாக இருக்கவில்லை. இந்நிலையில் 1980ம் ஆண்டு ஜுலை 20ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்கா திமுக இளைஞரணி முறைப்படி துவங்கப்பட்டது. 

1980ம் ஆண்டின் மத்தியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த இளைஞரணி அமைப்பின் துவக்கம் திமுக கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த துவக்க விழாவின் போது முக்கிய தலைவர்களாக இருந்த எஸ்.எஸ்.தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், துரைமுருகன், தா.கிருஷ்ணன், காவேரி மணியம், தங்கப்பாண்டியன், வைகோ, பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் உள்ள பல அணிகளில் இளைஞரணி மிக சக்திவாய்ந்த அணியாக உருவெடுத்தது. திமுகவின் பல்வேறு பேரணிகளில் சீருடைகளுடன் திமுக இளைஞரணியினர் பங்கேற்றனர். இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் பணியாற்றிய காலத்தில் ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ-வாகவும் பின்னர் சென்னை மேயராகவும் பணியாற்றி கட்சியில் பொருளாளராகவும், 2006ல் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும், கட்சியின் செயல் தலைவராகவும் பணியாற்றிய மு.க.ஸ்டாலின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 வயதை தாண்டிய நிலையிலும் திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலினே பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காலப்போக்கில் திமுகவில் இளைஞரணிக்குத் தான் முக்கிய பங்கு வழங்கப்பட்டது. அதன்பின் கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகளை வரைமுறைப்படுத்தி மாணவரணி, மகளிரணி என பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டு செயல்பட்ட திமுக சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப அணி என புதிய அணியை உருவாக்கியது. 

இதை சுட்டிக்காட்டித் தான் தூத்துக்குடியில் நடைபெற்ற இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையின் போது, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: கடந்த காலத்தில் இளைஞரணி செயலாளராக இருந்த நம்முடைய தலைவர் தான் இன்றைய முதலமைச்சராக பணியாற்றுகிறார். உங்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது என்று இளைஞரணியினருக்கு அறிவுரை வழங்கினார். 

மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த தினத்தை தமிழகம் கடந்து பிற நாடுகளிலும் தமிழர்கள் கொண்டாடும் திருநாளாக உள்ளது. இளைஞரணி மாநில துணைச் செயலாளராக உள்ள வக்கீல் ஜோயல் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று இருந்த காலக்கட்டத்தில் பல மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பொறுப்பாளராக இருந்த போது பகுதி வாரியாக அவரது சார்பில் அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளை வழங்கி உதயநிதி ஸ்டாலின் குட்புக்கில் இடம் பெற்றார். 

இந்நிலையில் இரண்டாவது முறையாக மாநில இளைஞரணி துணைச் செயலாளராக ஜோயல் தேர்வு செய்யப்பட்ட பின் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகரில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் 'இன்று பிறந்த நாள் காணும் இளம் தலைவர், ஆரூயிர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் என்றும் தலைவர் வழியில் ஜோயல்' என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாநகர் முழுவதும் எங்கு திரும்பினாலும் ஆட்டோக்களில் உதயநிதி ஸ்டாலின் வாழ்;த்து ஸ்டிக்கராக காட்சியளிக்கிறது.

திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி வக்கீல் ஜோயல் ஆட்டோக்களில் நூதன முறையில் விளம்பரம் செய்தது பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. அதே நேரத்தில் தூத்துக்குடி திமுக இளைஞர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், சென்னையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்ததினத்தை உற்சாகமாக கொண்டாடும் வகையில் திமுக இளைஞரணி சார்பில் துணைச் செயலாளர் வக்கீல் ஜோயல் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை சென்னையில் இருந்து முழுவீச்சில் செய்து வருகிறாராம்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post