தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா - மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்!

 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அறிவுரையின் படி மாநில இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி,  தலைமையில் கேக் வெட்டி பொதுமக்கள் பேருந்துநிலையத்தில் உள்ள பயனாளிகளுக்கு வழங்கினார்.

விழாவில் மாநகர துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கீதாமுருகேசன், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கவுன்சிலர் தெய்வேந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், செல்வகுமார், ராஜாமணி, மற்றும் ஜோஸ்பர், அருணகிரி, கணேஷ், புதிய பேருந்துநிலைய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வடக்கு மாவட்டம் மாநகர 12வது வார்டு சார்பாக ஸ்டேட் பாங்க் காலனி உள்ள அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு சேர், கரும்பலகை, குக்கர், பாய் மற்றும் சில பொருட்களை 12 வது வட்ட செயலாளர் சந்தனமாரி முத்து தலைமையில் சிறப்பு விருந்தினராக மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண் சுந்தர், மாமன்ற உறுப்பினர் தெய்வேந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.  

நிகழச்சியில் வார்டு துணை செயலாளர் சிவகுமார், வட்ட பிரதிநிதி. சேர்மத்துரை, அவை தலைவர் ராஜன்,  முன்னோடி ரமேஷ், இளைஞர் அணியை சேர்ந்த கார்த்தி, விக்கி, அரவிந்த், சுந்தர், கௌதம், முனீஸ்வரன் உள்படப லர் கலந்து கொண்டனர்.

இதே போல் சிவன்கோவில் தேரடி முன்பு நடைபெற்ற விழாவிற்கு வட்டச்செயலாளர் கீதாசெல்வமாரியப்பன் தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு இனிப்புகளை பகுதி திமுக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சோமநாதன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, இளைஞர் அணி நிர்வாகி ராஜா, பில்லா கவுதம், பில்லா பாபு, அய்யாசாமி, ராக் இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post