கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி.!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரூர்க்கி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம் அடைந்துள்ளார். 

உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post