கொரோனா கால ஒப்பந்த நர்ஸ்களுக்கு பணி நீடிப்பு இல்லை.!: தமிழக சுகாதாரத்துறை அரசாணையால் அதிர்ச்சியில் நர்ஸ்கள்.!

 

கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ்கள் பணி அமர்த்தப்பட்ட நிலையில் அந்த நர்சுகளின் பணி இன்றுடன் முடிவடையும் நிலையில் அந்த நர்சுகளுக்கு பணி நீடிப்பு இல்லை என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது நர்சுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அதற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நர்சுகள் நியமனம் செய்யப்பட்டனர்.

ஒப்பந்த அடிப்படையில் சுமார் 2300 நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை அவர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இந்த நர்சுகள் நியமனம் செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்த நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நர்சுகளின் பணி முடிவடைந்ததை அடுத்து பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என நர்ஸ்களின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் ஒப்பந்த நர்ஸ்களுக்கு பணி நீடிப்பு இல்லை என தமிழக சுகாதாரத் துறை சற்றுமுன் அரசாணை வெளியிட்டதை அடுத்து நர்ஸ் ஊழியர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post