ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்... அமமுக மாவட்ட செயலாளர் அ.விசாலாட்சி பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க., வேட்பாளர் ஏ.எம். சிவப்பிரசத்துக்கு குக்கர் சின்னத்தில் வாக்குகளை திரட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த திருப்பூர் மாநகர் மாவட்ட அமமுக ஆலோசனைக் கூட்டம் கொங்கு மெயின் ரோட்டில் நடைபெற்றது. கழக தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் மாநிலம் முழுவதும் 294 பேரை பொறுப்பாளர்களாக நியமித்து இருக்கிறார்கள். திருப்பூரில் இருந்து இருவரையும் நியமித்து இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே தேர்தல் பொறுப்பாளர்கள் என்று நினைக்காமல், அனைவருமே களத்தில் இறங்கி முழுமையாக பணியாற்ற வேண்டும். தமிழக அரசியலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு திருப்புமுனையாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமைய வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் முழு அர்ப்பணிப்புடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி இருந்து இறுதிக்கட்ட பிரசாரம் வரை ஓயாமல் பணியாற்றி மக்கள் செல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அ.விசாலாட்சி பேசினார்.
இந்த கூட்டத்தில், மாநில மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் கிங், எச்.ஜான். பாலுசாமி, கோமதி, புல்லட் ரவி, இறை ஆர்.வெங்கடேஷ், சுகம் வீர கந்தசாமி, ஆர்.சிவசக்தி, சிவக்குமார், ஜெகதீஷ், சுதாகர், முட்டை முருகன், சீமாட்டி குணசேகர், சரவணன், ஹைதர் அலி, நாகேஸ்வரன், திலகவதி, ஷாகுல் ஹமீது, மாபு பாஷா, பிரியா, பாலகிருஷ்ணன், முத்துக்குட்டி, சத்யா, ஜெயராம் ஜெயகாந்த், தெய்வநாயகம், சுந்தரலிங்கம், செந்தில்குமார், செந்தில், பாதம்பிரியா, லோகேஸ்வரி, பிரபு, கோபி, உத்ரலிங்கம், ரமேஷ்குமார், சதீஷ், சதீஷ்குமார், அன்பரசு, புல்லட்ராஜா, நந்தகுமார், குமார், ராஜரத்னம், ராணி, சரஸ்வதி, ஜெயந்தி, விமலா, ரீட்டாமேரி, ஆனந்தகுமார், கொடிவேலு, காஜா, சின்னையன், மணிகண்டன், சீமான், கார்த்திகேயன் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர். 
Previous Post Next Post