ஒரு கையில் ஸ்டியரிங்... இன்னொரு கையில் கியர் ராடு.. பதறாமல் பஸ் ஓட்டும் கோயம்புத்தூர் பொண்ணு..

சோமனூர் - காந்திபுரம் வழித் தடத்தில் ஆண்களுக்கு நிகராக பஸ் ஓட்டும் இளம்பெண் ஷர்மிளா, அந்த பகுதி மக்களிடையே சிங்கப்பெண்ணாக மிளிர்கிறார்.

கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்த மகேஷ் - ஹேமா தம்பதியரின் மகள் ஷர்மிளா. 24 வயதான இந்த இளம்பெண் தான் கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சோமனூருக்கு தனியார் பஸ் ஒன்றை அசால்டாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று வருகிறார்.

தந்தையின் டிரைவர் பணியால் ஈர்க்கப்பட்டு பஸ் ஓட்டுவதை லட்சியமாக கொண்டு பஸ் ஓட்டுகிறார். ஷர்மிளா கியர் ராடு பிடித்து, ஸ்டியரிங் சுழற்றும் லாவகம் பார்த்து, பஸ்ஸில் வரும் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அசந்து தான் போகிறார்களாம்.


 கோவையின் முதல் பெண் பஸ் டிரைவராக கலக்கும் ஷர்மிளா வின் பஸ்ஸில் ஏறி செல்ல தனி மகளிர் கூட்டமே இருக்கிறது என்கிறார்கள். "டாடி டிரைவர் என்பதால் எனக்கு ஆர்வம் அதிகம். சிலிண்டர் கொண்டு செல்லும் வாகனம் ஓட்டினேன். அதன் பின்னர் ஆட்டோ ஓட்டினேன். அப்புறம் கனரக வாகன பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருந்தேன். மகளிர் தினத்தன்று வேலைக்காக காத்திருக்கும் என்னை பற்றிய தகவல்கள் செய்தியாளர்கள் மூலமாக வெளிவந்தது. அதனை தொடர்ந்து சோமனூர் - காந்திபுரம் செல்லும் தனியார் பேருந்தில் டிரைவராக பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தினமும் 12 சிங்கிள் ஓட்டுகிறேன். அனைவரும் உற்சாகப் படுத்தி வாழ்த்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்கிறார் ஷர்மிளா... ஆண்களுக்கு நிகராக கனரக வாகனமான பஸ் ஓட்டும் கோயம்பத்தூர் பொண்ணு ஷர்மிளாவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகிறது. வாழ்த்துகள் சிங்கப்பெண்ணே...

Previous Post Next Post