தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத அறப்போராட்டம்!

 தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய  ஒரு நாள் கவன  ஈர்ப்பு உண்ணாவிரத அறப்போராட்டம் வருகின்ற 3 ந்தேதி  (திங்கள்) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து, இந்த சங்கத்தின், மாநில செயற்குழு உறுப்பினர் இரா.ரகு, ஈரோடு மாவட்ட தலைவர் லோ.சங்கர், ஈரோடு மாவட்ட செயலாளர்  ந.ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து கூறியதாவது:

1. தற்பொழுது  நடைமுறையில் இருந்து வரும் 1002 தனித்திட்ட சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பிக்கொள்ள  ஒப்புதல் கேட்டு அரசுக்கு  இயக்குநர் அவர்களால் வைக்கப்பட்ட  கருத்துருவிற்கு (R.No.80083/MP.1/S1/2020 Dt. 11.12.2020) ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்

2. இளைய சுகாதார ஆய்வாளர்கள் கட்டமைப்பை விரிவுபடுத்திட  இரண்டு சுகாதார நிலையத்திற்கு ஒரு சுகாதார ஆய்வாளர்கள் நிலை-2  வீதம் 2715 சுகாதார ஆய்வாளர்கள் நிலை-2 பணியிடங்களை உருவாக்கி இயக்குநர் அவர்களால் அரசுக்கு வைக்கப்பட்ட கருத்துருவிற்கு ( R.No. 53699/MP.1/S1/2020 Dt.27.07.2020) ஒப்புதல் வழங்கி  அரசாணை வெளியிட வேண்டும்

3. சுகாதார ஆய்வாளர்களுக்கு முற்றிலும் எதிரான அரசாணை எண். 337 -னை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்

4. உச்ச நீதிமன்றம் உறுதி செய்த  C.A.6660/2011- நாள்.25.02.2015 வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், 1996-ல் வெளியிடப்பட்ட 115738/MP2/S2/95 பணிமூப்பு பட்டியலில் உள்ள அனைவருக்கும் துப்புரவு ஆய்வாளர் பயிற்சி முடித்த நாளிலிருந்து முன்தேதியிட்டு சுகாதார ஆய்வாளர் நிலை-1 பதவி உயர்வு வழங்கி உத்தரவிட வேண்டும்

5.  01.08.1997-ல் சுகாதார ஆய்வாளர் நிலை-1 ஆக ஈர்க்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு அதே பணி மூப்பு பட்டியலில் உள்ள மூத்த சுகாதார ஆய்வாளர்களுக்கு இளையவர்களுக்கு NMS, HE பதவி உயர்வு வழங்கிய நாளிலிருந்து முன் தேதியிட்டு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட வேண்டும்.

6.  01.04.2003 க்கு முன்னர் பணிநியமனத்திற்கான அனைத்து நடைமுறைகளும்  முடிந்து 2006 -ல் பணிநியமனம் பெற்ற 742 சுகாதார ஆய்வாளர்களை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் பல்வேறு  பரிந்துரை படி பழைய‌ பென்சன் திட்டத்தில் சேர்த்திட வேண்டும்.

7. 2006 ஆம் ஆண்டிற்கு பின்னர் உருவாக்கப்பட்ட 389 புதிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிலை-1 சுகாதார ஆய்வாளர்களை நியமனம் செய்திட ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். 

மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளதாக கூறினர். 


-நாராயணசாமிPrevious Post Next Post