தாய்லாந்தில் 12 பேரை விஷம் கொடுத்து கொன்ற கர்ப்பிணி பெண் கைது.

கர்ப்பிணி பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்கள் 12 பேரை சயனைடு கொடுத்து கொன்ற சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது.

தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த சரத் ரங்சிவுதாபோர்ன், 32 என்ற பெண், கடந்த 14-ம் தேதியன்று தனது ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் என்பவருடன் ரட்சபுரி மாகாணத்தில் புத்த தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது உடன் வந்த ஆண் நண்பர் சிரிபோர்ன் கான்வோங்க் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

திடீர் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், பிரேத பரிசோதனை நடத்தியதில் உடலில் கொடிய விஷமான சயனைடு கலந்திருப்பது தெரியவந்து.

இது தொடர்பாக சரத் ரங்சிவுதாபோர்ன், 32 என்பவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் கடந்த 2020 முதல் சரத் ரங்சிவுதாபோர்னுடன் தொடர்பில் இருந்த 12 ஆண் நண்பர்கள் இதே போன்று விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருப்பதும் , தற்போது அப்பெண் கர்ப்பிணியாக இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post