காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!

 

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்த நிலையில், ஒன்றிய அரசு தற்போது இத்திட்டத்தினை ரத்து செய்துள்ளது!

நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததை அடுத்து திட்டத்தை கைவிட்டது ஒன்றிய அரசு

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்தாகி உள்ளது என டெல்டா விவசாயிகள் நன்றி!


Ahamed

Senior Journalist

Previous Post Next Post