வேகம் எடுத்த கோவை - சென்னை வந்தே பாரத் டிக்கெட் முன்பதிவு.

கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோதி நாளை தொடங்கி வைக்கிறார். 


ஏப்ரல் 9-ம் தேதி முதல் இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது. வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. 

8 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் மொத்தம் 530 இருக்கைகள் உள்ளது இதில் 180 டிகிரி வளையக்கூடிய 52 எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் இருக்கைகளும், 478 சேர் கார் இருக்கைகளும் உள்ளது. 

இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்ட நிலையில் பயணிகள் மிகவும் ஆர்வம் காட்டியதை அடுத்து சில நிமிடங்களிலேயே வெயிட்டிங் லிஸ்ட் எட்டியது. எக்ஸிக்யூட்டிவ் சேர் காரை பொதுமக்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸிக்யூடிவ் சேர் ரூபாய் 2325, சேர் கார் ரூபாய் 1280 என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post