ஆணையாளரை தாக்கியதாக புகார்... புளியம்பட்டி நகராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி, நகராட்சியில் உள்ள சந்தையில், சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு மேலாக, மாட்டு இறைச்சி கடை செயல்பட்டு வந்தது. இந்த கடைகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி,  திடீரென நகராட்சி நிர்வாகத்தால், இரவோடு இரவாக ஆறு கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனை கண்டித்து, மாட்டு இறைச்சி வியாபாரிகள் மற்றும் சிபிஎம் உள்ளிட்ட அமைப்புகள், அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையாளர் அறைக்கு சென்ற திமுக நகராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் ஆணையாளர் சையது உசேனை முற்றுகையிட்டு, ஒருமையில் பேசி, அவரை தள்ளியதாக கூறப்படுகிறது.  

ஆணையாளரை தாக்கிய நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன், நகர் மன்ற துணைத் தலைவர் சிதம்பரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி  நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக, தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்க,மாநிலத் தலைவர் முருகானந்தம் தலைமையில், புளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டவர்கள் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது, காவல்துறையிடம்புகார் அளித்தும், வழக்கு பதியப்படவில்லை. எனவே இருவர் மீதும், வழக்கு பதிந்தும், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.. இந்த ஆர்ப்பாட்டத்தில்,

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க துணைப் பொதுச் செயலாளர் குமரவேல்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் ராக்கி முத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர், விஜய மனோகரன்,மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்நாதன் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர், காசி விஸ்வநாதன்,தமிழ்நாடு நகராட்சி அலுவலர் சங்க செயற்குழு உறுப்பினர் சங்கீதா மற்றும் துணைத் தலைவர் ஆனந்த்,தமிழ்நாடு சுகாதார அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் விஜயராஜன், தமிழ்நாடு அரசு ஊரியர் சங்க சம்மேளன பவானிசாகர் மண்டல பொறுப்பாளர், பூபதி ராஜா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சத்திய மங்கலம் வட்டக் கிளை செயலாளர், முத்துசாமி,தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க, மாநில செயற்குழு உறுப்பினர் ரகு, அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர்மு.சீனிவாசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவுரையாக,தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர், தாமோதரன் நிறைவுறையாற்றினார்.நிறைவாக கௌதம் நன்றியுரை கூறினார். பின்னர் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முருகானந்தம் பேசுகையில் செய்தியாளர் களிடம் பேசுகையில், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி ஆணையாளரை,தாக்கிய நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,இவர்கள உடனடியாக சம்பந்தப்பட்ட பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும்,அரசு இது குறித்து நடவடிக்கை மேற் கொள்ளாவிடில், விரைவில், தமிழக முழுவதுமுள்ள நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் முன்பு சங்கத்தின் சார்பில் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.


Previous Post Next Post