ரம்ஜானை முன்னிட்டு திருப்பூரில் அமமுக சார்பில் 500 பேருக்கு குக்கர், அரிசி... முன்னாள் மேயர் அ.விசாலாட்சி வழங்கினார்

 திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு குக்கர், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முன்னாள் மேயர் விசாலாட்சி வழங்கினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் சிடிசி கார்னரில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமமுக தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி 500க்கும் மேற்ப்பட்டோருக்கு குக்கர், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.  இந்த விழாவில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும்போது,  மதம் பாராமல், ஜாதி பாராமல் இருந்த அம்மா அவர்களின் வழியில் தான் மக்கள் செல்வர் டிடிவி.தினகரன் செல்கிறார். பாஜக செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் என்று எந்த விழா வந்தாலும் அந்த விழாவில் மக்களை சந்தித்து மக்களோடு கொண்டாடுகிற இயக்கம் அமமுக. என்று கூறினார். மேலும்,  டிடிவி தினகரன் அவர்களது பெயரால் இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். என்றும், மக்களோடு மக்களாக இந்த சமுதாயத்தில் ஒரு குடும்பமாக இருக்கும் எங்களுக்கு என்றும் நீங்கள் ஆதரவை தர வேண்டும்.என்றும் முன்னாள் மேயர் விசாலாட்சி கூறினார். இந்த விழாவில், மாவட்ட கழக தலைவர் பி. பாலுசாமி, மாவட்ட கழக துணை செயலாளர் திரு புல்லட் ரவி, மாவட்ட கழக பொருளாளர் எல்.முத்துக்குட்டி

மாவட்ட கழக இணை செயலாளர் எஸ். வினுப்பிரியா, மாவட்ட கழக துணைச் செயலாளர் கீதா ராணி, கழகப் பொதுக் குழு உறுப்பினர்கள், திருப்பூர் தெற்கு தொகுதி டி.ஆர். சத்யா, திருப்பூர் வடக்கு தொகுதி எஸ் நாகேந்திர குமார், பகுதி கழக செயலாளர்கள் நெருப்பெரிச்சல் சுகம் வீர கந்தசாமி, நல்லூர் எஸ். ஜெகதீஷ், ராயபுரம் எக். முருகன், கொங்கு நகர் ஆர். சிவசக்தி, வாலிபாளையம் எம் சிவக்குமார், வேலம்பாளையம் ஆர். சுதாகர், பாண்டியன் நகர் கே. ராஜாங்கம்., .அனுப்பர்பாளையம் கே. பழனிச்சாமி, நொய்யல் இ. ஹைதர் அலி, கோல்டன் நகர் ஒர்க் ஷாப் பாலு, கருவம்பாளையம் எம் சதீஷ், காந்தி நகர் ஆர். தங்கராஜ், பெரியார் காலனி ஆர். மோகன், விஜயாபுரம்  புல்லட் ராஜா, திருப்பூர் வடக்கு ஒன்றியம் நாகேஸ்வரன், மாவட்ட அணி செயலாளர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மன்றம் சீமாட்டி கு. குணசேகர், இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா பேரவை இறை ஆர். வெங்கடேஷ்,  புரட்சித்தலைவி அம்மா தொழிற் சங்க பேரவை எம் பாலகிருஷ்ணன், புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர். இளைஞரணி எம். கலியமூர்த்தி, மகளிர் அணி எம். திலகவதி , மாணவர் அணி செயலாளர் கேஸ் சக்தி, திருப்பூர் பனியன் தொழிலாளர் நல சங்கம் ஹெச். சுரேஷ் ராஜா, சிறுபான்மை நலப் பிரிவு  ஏ.சாகுல் அமீது, பொறியாளர் அணி காட்டன் பி. சக்திவேல் , இளைஞர் பாசறை ஆர். ஜெயகாந்த்,, தகவல் தொழில் நுட்ப ஆண்கள் பிரிவு ஏ. மாபு பாஷா, இளம் பெண்கள் பாசறை ஹாஜிரா பானு, தகவல் தொழில்நுட்ப பெண்கள் பிரிவு எஸ். பிரியா, வழக்கறிஞர் பிரிவு யோகப்பிரியா, மீனவர் அணி பச்சமுத்து, மாவட்ட வர்த்தக அணி எல். எஸ். ஆர். மணிகண்டன், விவசாயப் பிரிவு பனங்காடு என். ராஜேந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு கே மனோகரன், மருத்துவர் அணி என். அழகேந்திரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி கொடி திரு பி. வேலு, மாற்றுத் திறனாளிகள் நலப் பிரிவு ஜான் மென்டன்ஷா, திருப்பூர் வடக்கு ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை குமணன், ஒன்றிய மகளிர் அணி ஜெயந்தி, ஒன்றிய இளம் பெண்கள் பாசறை ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Previous Post Next Post