திருப்பூர் மாசானி அம்மன் கோவிலில் 30 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் விழுந்தது... 3 மின் கம்பங்கள் முறிந்தன.

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரம் மற்றும் அரச மரங்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று மாலை  பெரும் காற்றுடன் மழை பெய்தது காரணமாக கோவில் வளாகத்தில் இருந்த அரச மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. 

இதில் கோவிலில் உள்ள கான்கிரீட் தளம் மற்றும் காம்பவுண்ட் சுவர் சேதம் அடைந்தது. மேலும் பெரிச்சிபாலையம் பகுதிக்கு செல்லக் கூடிய மின் கம்பிகள் மீது அந்த மரம் விழுந்ததால் 3 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இத்துடன் கோவில் வளாகத்தில் கருப்பராயன் சாமிக்கு அருகில் இருக்கக் கூடிய வேப்ப மரமும் வேரோடு பெயர்ந்து நிற்கிறது. 

இதனால் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த சிமெண்ட் சீட் கூரை, தரைத்தலங்கள் சேதம் அடைந்தது. நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் அந்த பகுதி முழுக்க மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது. மரங்களை அகற்றி மின்கம்பங்களை மாற்றி விரைவில் மின் சேவை வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Previous Post Next Post