அரிசி கொம்பன் யானை நடமாட்டத்தால் சுருளி அருவிக்கு அனுமதி மறுப்பு

சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கம்பம் அருகே மேகமலை வன உயிரின சரணாலய பகுதியின் மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும்  வழிபாட்டுத் தலமாகவும்உள்ள இந்த அருவிக்கு நாள்தோறும் வெளி மாநில மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.

இந்நிலையில் கோடை கால விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வந்தனர். இன்று அரிசிகொம்பன் யானை சுருளிப்பட்டி தோட்டத்தில் புகுந்தது.

 தொடர்ந்து வனப்பகுதிகளில் சுற்றிதிரிவதால் இன்று சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாராயண தேவன்பட்டி, கம்பம் சுருளிப்பட்டி வரும் பாதைகள் அடைக்கப்பட்டு திருப்பிவிடப்படுகின்றனர்.

Previous Post Next Post