பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை


திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் திருப்பூர் பகுதி பள்ளிகளில் முதல் மதிப்பெண்களைப் பெற்ற மாணாக்கர்களுக்கு  28-ஆம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது

 திருப்பூர் பகுதி பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் சிறப்பாக நடத்தி வருகிறது. மேலும், ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கையுந்து பந்து போட்டியையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022-23-ஆம் கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சிறுபூலுவபட்டி, அமர்ஜோதி கார்டனில் உள்ள டிசெட் அலுவலக அரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளையின் (டிசெட்) செயலாளர் துரைசாமி வரவேற்புரையாற்றினார். டிசெட் தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி  தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியம் மற்றும் வெற்றி & வனத்துக்குள் திருப்பூர்’ திட்டத்தின் தலைவர் கிளாசிக் போலோ சிவராம்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு  திருப்பூர் பகுதி பள்ளியளவில் முதலிடம் பெற்ற சுமார் 34 மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையினை வழங்குகின்றனர். டிசெட் பொருளாளர் தேவராஜன் நன்றியுரை கூறுகிறார். விழாவில் முதலிடம் பிடித்த பிரதிக்‌ஷா ரூ.5,000, இரண்டாமிடம் யாஷிகா குமாரிக்கு ரூ.4,000, சத்யா ரூ.4,000 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மற்ற மாணவர்களுக்கு 31 பேருக்கு தலா ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. மொத்தம்  34 பள்ளிகளைச் சேர்ந்த 34 மாணாக்கர்களுக்கு ரூ.1,06,000 ரொக்கப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Previous Post Next Post