மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக திருநெல்வேலி, தென்காசிக்கு சிறப்பு ரயில்... வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது.

 தென் மாவட்ட மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாக திருநெல்வேலி மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்க இருக்கிறது. 

ஏற்கனவே கோவை, உடுமலை வழியாக தென்காசிக்கு வெள்ளிக்கிழமை தோறும் வாராந்தர ரயில் இருந்தது.தற்போது திங்கள் கிழமை தோறும் புதிதாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பவதாது: 

வண்டி எண் 06030 என்ற எண்ணுடைய சிறப்பு ரயில் ஞாயிறு தோறும் இரவு 07.00 மணிக்கு திருநெல்வேலி, 07.25க்கு சேரன்மகா தேவி, 07.40 அம்பா சமுத்திரம், 08.00கீழக்கடையம், 08.12க்கு பாவூர் சத்திரம், 08.40க்கு தென்காசி, 08.56க்கு கடையநல்லூர், 09.15க்கு சங்கரன்கோவில், 09.45க்கு ராஜபாளையம், 10.00மணிக்கு ஸ்ரீவில்லிப்புதூர், 10.15க்கு சிவகாசி, 11.15க்கு விருதுநகர், 00.55க்கு மதுரை, அதிகாலை 2.00 மணிக்கு திண்டுக்கல், 02.42க்கு ஒட்டன்சத்திரம், 03.10க்கு பழனி, 03.50க்கு உடுமலை, 04.47 பொள்ளாச்சி, 06.05க்கு போத்தனூர், 06.30 கோவை, 07.30க்கு மேட்டுப்பாளையத்தை அடைகிறது. 

வண்டி எண் 06029 என்ற எண்ணுடன் மேட்டுப்பாளையத்தில் திங்கள் தோறும் இரவு 7.45 மணிக்கு கிளம்புகிற இந்த சிறப்பு ரயில் 8.40க்கு கோவை, 8.55க்கு போத்தனூர், 10.05க்கு பொள்ளாச்சி, 10.35க்கு உடுமலை, 11.15க்கு பழனி, 11.40க்கு ஒட்டன்சத்திரம், 12.40க்கு திண்டுக்கல், அதிகாலை 2.15க்கு மதுரை, 03.02க்கு விருதுநகர், 03.27க்கு சிவகாசி, 03.44க்கு ஸ்ரீவில்லிப்புதூர், 03.57க்கு ராஜபாளையம், 04.20க்கு சங்கரன் கோவில், 04.42க்கு கடையநல்லூர், 05.20 க்கு தென்காசி, 05.35 க்கு பாவூர் சத்திரம், 05.52 க்கு கீழக்கடையம், 06.05க்கு அம்பாசமுத்திரம், 06.30க்கு சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக  07.45 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைகிறது. 
இந்த ரயில் ஜூலை 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயிலில் ஏ.சி., 2 டையர் ஒரு பெட்டி, ஏ.சி., 3 டையர் இரண்டு, ஸ்லீப்பர் 7, இரண்டாம் வகுப்பு சிட்டிங் 1, பொதுப்பெட்டிகள் 3  பெட்டிகள் இடம்பெறுகின்றன. 

முழு பயணத்துக்கு ஸ்லீப்பர் டிக்கெட் 385 ரூபாய், 3 ஏ.சி.,க்கு 1050 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ரயிலில் கூடுதலாக பொதுப்பெட்டிகளை இயக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 



Previous Post Next Post