மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நம்பியூர் பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம்



மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நம்பியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு  போராட்டம்

நம்பியூர் அடுத்த காமராஜர் காலனியில் 300க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய உள்ளன. 


சுற்றுவட்டார பகுதிகளான ஆட்டையங்காட்டுபாளையம், சூரியபாளையம், கொன்னமடை, கண்ணாங்காட்டுபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன.தற்போது நம்பியூர் பேரூராட்சி சார்பாக காமராஜ் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே புதிதாக மின்மயானம் அமைக்க உள்ளது.

இந்த மின்மயானம் அமைக்கும் இடத்தில் கழிவுநீர் ஓடை உள்ளதால் அதை ஆக்கிரமித்து மின்மயானம் கட்டப்பட உள்ளது அப்படி கட்டப்படும் பொழுது மழைகாலங்களில் ஓடையில் வரும் கழிவு நீர்  கிராமங்களில் புகும் அபாயம்  உள்ளது அரசுப்பள்ளி அருகில் அமைந்துள்ளதால் மின்மயானத்தில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்ககூடும் என்பதால் மின்மயானத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி நேற்று வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.


அதைத்தொடர்ந்து இன்று 5 கிராமங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்திற்க்கு மனு அளிக்க வந்தனர்.

காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது புதிதாக தங்கள் பகுதியில் மின்மயானம் அமைக்க எங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் கிராம மக்களிடம் கருத்து கேட்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து மின்மயானம் அமைக்கும் பணியை கைவிடக்கோரியும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் வரவேண்டும் என வலியுறுத்தி நம்பியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து நம்பியூர் பேரூராட்சித் தலைவர் செந்தில்குமார்,பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ்ஆகியோரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர்,பேச்சு வார்த்தைக்கு வர காலதாமதமானதால்தேனீர் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.மின் மயானம் எரிவாயு தகனமேடை அமைக்கும் இடத்திற்கு பதிலாக

வேறு இடம் தேர்வு செய்து கொள்கிறோம் என்று மன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

செய்தியாளர். எம்.மாரிச்சாமி.

Previous Post Next Post