கோவை மேட்டுப்பாளையம் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா

*கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மேட்டுப்பாளையம்  வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா.*
மேட்டுப்பாளையம் ஜூலை.25
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாக மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் கோவில் இருந்து வருகிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டின் குண்டம் திருவிழா கடந்த 18 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜைகளும் செய்யப்பட்டு வந்தன. 
தொடர்ந்து நேற்று முன்தினம் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது.அதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும்,மாலை 5 மணியளவில் பொங்கல் வைத்து,திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர் வசந்தா தலைமையில் பொங்கல் வைத்து பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது
காலை 3 மணியளவில் கோவை பொதுப்பணித்துறை அம்மன் அறக்கட்டளை சார்பில் பவானி ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் பச்சை பட்டு உடுத்தி சிம்ம வாகன சப்பரத்தில் அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சரியாக 6 மணி அளவில் தலைமை பூசாரி ரகுபதி அம்மனின் சூலாயுதத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் எலுமிச்சை மற்றும் பூ சென்டைகுண்டத்தில் உருட்டி விட்டு அதன் பின்னர் குண்டம் இறங்கி நிகழ்ச்சி துவக்கி வைக்க வைத்தார்.
அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, சம்பத், பிரியங்கா ரகுபதி,உபயதாரர் கெண்டையூர் செல்வராஜ்,திருப்பூர் ஜி.கே.எம். கலர்ஸ் செல்வமணி,சாய் குமரேஷ்,தேக்கம்பட்டி ஊராட்சி தலைவர் நித்யா நந்தகுமார் ,உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டுச்சென்றனர். பின்னர்,கரகம் எடுத்தும்,அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கி அருளாசி பெற்றுச்சென்றனர் விழா ஏற்பாடுகளை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி, அலுவலகப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
பரம்பரை அறங்காவலர் குடும்பத்தின் சார்பில் வனபத்ரகாளியம்மன் கோவில் ஸ்தல வரலாறு புத்தகம் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏ. டி .எஸ். பி. சுரேஷ் தலைமையில் டிஎஸ்பிக்கள் தென்னரசு, பாலாஜி, வெற்றிச்செல்வன் முன்னிலையில் மேட்டுப்பாளையம் சிறுமுகை காரமடை அன்னூர் உட்பட காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், உட்பட 12 இன்ஸ்பெக்டர்கள்  காவலர்கள்,ஊர்க்காவல் படையினர் என சுமார் 550 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
திருக்கோவிலின் பல்வேறு பகுதிகள் குறிப்பாக குண்டம் இறங்குமிடம்,பவானி ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் இடங்கள், காணிக்கை செலுத்தும் இடங்கள்,நேர்த்திக்கடன் செலுத்தும் இடங்கள் என பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு காவல் துறை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவாறே நிகழ்வுகளை கண்காணிக்கப்படுகின்றன மேலும்,நான்கு இடங்களில் கண்காணிப்பு கோபுரம் கோபுரங்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.குண்டம் இறக்கும் பக்தர்களின் பாதுகாப்புகாக  சூரியா மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.
வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவை,திருப்பூர்,நீலகிரி,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர் என்பதால் கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தியதோடு அம்மனின் அருளாசி பெற்றுச்சென்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவை மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தீயணைப்பு துறை சார்பில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டன.
Previous Post Next Post