கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சமூக ஆர்வலர் மயிலாடுதுறை அப்பர் சுந்தரம் பாராட்டு

*முதல்வர் மு.க.ஸ்டாலின், 7000கோடி நிதி வழங்கி தொடங்கிடும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வாழ்க! வளர்க! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!!* தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நல உதவித்திட்டங்கள் தொடர்ந்து நிகழ்காலஅரசு மற்றும் கடந்த கால ஆட்சிகளால் செயல்படுத்தப்பட்டு வருவதில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்னும் பெயரில் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் மிகவும் போற்றக்கூடியதாக மாறியுள்ளது. இதற்கு முன்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலைஞர் ஆட்சியின் பொழுது கலர் டிவி, கேஸ் அடுப்பு வழங்கியது, அடுத்தது ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்காக மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது போன்றவை அனைவராலும் வரவேற்கக் கூடிய திட்டமாக அமைந்திருந்தது. அதன் பிறகு இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண அறிவிப்பு என்பது வேலைக்குச் செல்லும் மற்றும் தினசரி பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள்,தனியார் வீட்டுவேலை பெண்கள்,காய்கறி,பழங்கள், மீன்,பூ விற்பனைக்கு செல்வோர் உள்பட அத்தனை பெண்களுக்கும் பேருதவியாக அமைந்து, மாதத்திற்கு குறைந்தது ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை பொருளாதார மிச்சம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆண்டுக்கு 2800 கோடி ரூபாய் செலவீடு அரசுக்கு ஆகி மகளிர் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனையும் தாண்டி வீட்டிலுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று 2021திமுகழக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகளுக்கான முகாம் தமிழ்நாடு முழுவதும் 35923 இடங்களில் இன்று 24-7-2023முதல் துவக்கப்பட்டு, செப்டம்பர் 15 முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாளில் வங்கிகள் வாயிலாக வழங்கப்பட இருப்பது என்பது மகளிர் மத்தியில் மட்டற்ற மாபெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. தற்போது உள்ள தமிழக அரசின் நெருக்கடி நிதி நிலையில் ரூபாய் 7000கோடி நிதி ஒதுக்கீடு செய்து பெருந்தன்மையோடு அறிவித்து செயல்படுத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு 1கோடி மகளிர் சார்பில் நன்றி பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறோம். எஞ்சியவர்களுக்கும் எதிர்காலத்தில் வழங்கிட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
Previous Post Next Post