ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு :

 ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம்  சென்ன சமுத்திரம் பேரூராட்சி பகுதியைச் சார்ந்த குப்புசாமி என்பவர் கடந்த மாதம்( 29.6.23)  மீனா சந்திரலிங்கத்தை  ஜாதியின் பெயரை சொல்லியும், ஆபாசமாகவும் இழிவாகவும் பேசியுள்ளார். அவர்களின் கருவுற்ற பசு மாட்டை   அடித்து துன்புறுத்தி உள்ளார்.



 மீனா சந்திரலிங்கத்தை கருங்கல்லால் அடித்து கொலை முயற்சி செய்ததை அடுத்து அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்  6.7.23 -SC ST- PCR வழக்கு பதிவு செய்யப்பட்டது.



 ஆனால் இதுவரை குற்றவாளியை  காவல்துறை கைது செய்யவில்லை.



 சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது  என்றும், குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன்  தலைமையில் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும், வழங்கப்பட்டது.



 மேலும் மாநில பொறுப்பாளர் பன்னீர்செல்வம், மாநில செயலாளர் சந்தோஷ் குமார், மாநகர நிர்வாகிகள் வாசுதேவன், ராஜ், பள்ளிபாளையம் ஒன்றிய நிர்வாகிகள் வீரப்பன்,கருப்புசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


 தமிழ் அஞ்சல் செய்தியாளர் சுரேஷ் செல்வராஜ்.

Previous Post Next Post