தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஈரோடு மாணவ மாணவியர்கள் 19 தேசிய விருதுகளும், 6 சாதனையாளர்கள் விருதுபெற்று அமைச்சரிடம் வாழ்த்து...

 தேசிய அளவில் ஆன்லைனில் ஜூனியர், சீனியர் கேட்டகிரி ஓவிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான தேர்வு சென்னையில் நடைபெற்றது. நடைபெற்ற ஓவிய போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து அதிகமான மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். அதில் 19 தேசிய விருதுகளும், 6 சாதனையாளர் விருதுகளும் பெறப்பட்டன. சிறந்த ஆசிரியருக்கான ஜகான் விருது உலக சாதனையாளர் கடுகு ஓவியர் ஜெ. வெங்கடேஷ் அவர்களுக்கு கிடைத்துள்ளது.


 விருதுகளை  தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துச்சாமி அவர்கள் முன்னிலையில் விருதுகளை மாணவ மாணவியர்கள்  பெற்றுக்கொண்டனர்.


 தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்

Previous Post Next Post